தூத்துக்குடி மாவட்டம் கீழமங்கலத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியில் படிக்கின்ற அனைத்து மாணவ மாணவிகள் திடீரென்று வகுப்பை புறக்கணித்துவிட்டு பள்ளி வளாகத்திற்குள் அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டனர். உடனடியாக பள்ளிக்கு வந்த கல்வித்துறை அதிகாரிகளிடம் அழுதபடி தங்கள் பிரச்சனைகளை மாணவிகள் கூறினர். அதில், பள்ளியில் வழங்கப்படும் உணவில் புழுக்கள் இருப்பதாகவும், முட்டைகள் வேகாமல் இருப்பதாகவும், அதனால் மாணவ மாணவிகள் அந்த உணவினை அருகே உள்ள குப்பை தொட்டியில் கொட்டி விடுவதாகவும் கூறினர். இதுதொடர்பாக புகார் அளித்தால் சமையல் உதவியாளர் தரக்குறைவாக மாணவ மாணவிகளை பேசுவதாகவும் கண்ணீர் விட்டு தங்கள் வேதனைகளை கல்விதுறை அதிகாரிகளிடம் கூறினர்.
ஏழைகளாக இருப்பதால்தான் அவர்களால் பணம் கட்டி தனியார் பள்ளியில் படிக்க முடியாமல் அரசு பள்ளிக்கு வருகின்றனர். அரசு பள்ளியிலும் இதுபோல் தரமற்ற உணவுகளை கொடுத்தால் அவர்கள் எப்படி சாப்பிடுவார்கள், எப்படி படிப்பார்கள். அவர்கள் படித்து அவர்களின் குடும்ப நிலையை மாற்றுவதற்காத்தான் பள்ளிக்கு வருகின்றனர்.ஆனால் பள்ளியிலே ஒரு பிரச்சனை என்றால் பாவம் அவர்களால் என்ன செய்யமுடியும். மாணவர்கள் சாப்பாட்டிற்கு கஷ்டபடுவதால் இலவச மதிய உணவை கொண்டு வந்தவர் கர்மவீரர் ஐயா காமராசர் அவர்கள். ஆனால் திமுக ஆட்சி செய்யும் இன்றைய தமிழகத்தில், எந்த பள்ளியில் கர்மவீரர் ஐயா தனது இலவச மதிய உணவு திட்டத்தை தொடங்கி வைத்தாரோ அந்த பள்ளியிலே சத்துணவு மோசமாக இருப்பதாக கூறி மாணவர்கள் உணவை கொட்டும் அவல நிலைக்கு தள்ளியுள்ளது திமுக அரசு. பசியோடு பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகளுக்கு தரம் குறைவான உணவளிக்கும் இந்த பாவத்தை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எந்த காசியிலும் கரைக்க முடியாது. இவ்வாறு சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
https://x.com/TrichySuriyaBJP/status/1768537898301927898?s=20