நடிகையின் #Metoo புகார்: பாலிவுட் ‘திகுதிகு’!

நடிகையின் #Metoo புகார்: பாலிவுட் ‘திகுதிகு’!

Share it if you like it

தனக்கு நடந்த பாலியல் கொடுமை குறித்து தற்போது பிரபல நடிகை வெளிப்படுத்திருக்கும் சம்பவம் பாலிவுட் திரையுலகில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருககிறது.

பெங்களூருவைச் சேர்ந்தவர் குப்ரா சேட். பிரபல மாடல் அழகியான இவர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வந்திருக்கிறார். நெட் ஃப்ளிக்ஸில் வெளியான ஸ்கேர்ட் கேம்ஸ் வெப் சீரிஸ் மூலம் மிகவும் பிரபலமானார். மேலும், ஹிந்தியில் ரெடி, சுல்தான் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். இவர், ‘Open Book: Not quite a Memoir’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார். இதில்தான், இளம் வயதில் தனக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து விரிவாக குறிப்பிட்டிருக்கிறார் குப்ரா சைட். இதுகுறித்த ஒரு செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிடவே, பாலிவுட் திரையுலகமே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

அந்தப் புத்தகத்திதில், தனது குடும்ப நண்பர் ஒருவரால் இரண்டரை ஆண்டுகள் தனக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள் நடந்ததையும், தன்னுடைய குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அந்த கொடுமைகளை பொறுத்துக் கொண்டதாகவும் குப்ரா சேட் தெரிவித்திருக்கிறார். இவை அனைத்தும் பெங்களூருவில் உள்ள ஒரு பிரபல உணவகத்திற்கு சாப்பிட சென்றபோது தொடங்கியதாம். திருமணமான அந்த நபரை, குப்ராவும், அவரது சகோதரரும் UNCLE என்றே அழைத்து வந்ததாகவும், ஆனால் அந்த நபர் ஒரு நாள் குப்ராவை அழைத்து தன்னை X என்றே அழைக்குமாறு அன்புக் கட்டளை இட்டதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும், தங்களது குடும்பத்தின் பண நெருக்கடியை சில நிமிடங்களிலேயே தீர்த்து வைத்த அந்த X, அதன் பிறகு தங்களின் நண்பராகவும், நம்பிக்கைக்கு உரியவராகவும் ஆனதாகவும் குப்ரா சேட் குறிப்பிட்டிருக்கிறார். இதன் பிறகு, அந்த நபர் அடிக்கடி குப்ரா வீட்டுக்கு வந்து செல்வதும், தனது தாய் முன்பே கன்னத்தில் முத்தமிடுவதும் தொடர்ந்ததாகவும், இதை தனது அம்மா பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறியிருக்கும் குப்ரா சேட், ஒருமுறை காரில் சென்றபோது முன்புறமிருந்து தன்னுடைய தொடையில் சில்மிஷம் செய்தது போன்ற தொல்லைகளில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு நாள், தனது அம்மா அப்பா இருவருக்கும் சண்டை நடந்தபோது, செய்வதறியாது அந்த X -ஐ குப்ரா அழைத்து, சண்டையை தீர்த்து வைக்குமாறு கேட்டபோது, அவர் தன்னை ஹோட்டலில் வந்து சந்திக்கும்படி கேட்டதாகவும், அங்கு சென்றபோது மீண்டும் முத்தமிட்டதாகவும் தெரிவித்திருக்கும் குப்ரா, இப்படியாக இரண்டரை ஆண்டுகளாக நடந்து வந்த கொடுமை, தன்னுடைய பட்டப்படிப்பு முடிந்து துபாய்க்கு குடியேறிய பிறகுதான் முடிவுக்கு வந்ததாகக் கூறியிருக்கிறார். மேலும், இச்சம்பவம் நடந்த சில ஆண்டுகளுக்கு பிறகு, மேற்கண்ட கொடுமைகளை தனது தாயாரிடம் கூறியதாகவும், அதற்கு அவர் குற்ற உணர்ச்சியில் அழுததோடு, மன்னிப்புக் கேட்டதாகவும் அந்த புத்தகத்தில் குப்ரா சேட் குறிப்பிட்டிருக்கிறார். இந்த #Meetoo விவகாரம்தான் தற்போது பாலிவுட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it