மும்பை ரெட் லைட் ஏரியா என்று விமர்சனம் செய்த தி.மு.க எம்.பி-க்கு தான் கண்டனம் தெரிவிக்கவில்லை..! நேர்மையாக செய்தி வெளியிடும் ஆப்கான் பத்திரிக்கையாளர்களுக்கு கூடவா குரல் கொடுக்க கூடாது?

மும்பை ரெட் லைட் ஏரியா என்று விமர்சனம் செய்த தி.மு.க எம்.பி-க்கு தான் கண்டனம் தெரிவிக்கவில்லை..! நேர்மையாக செய்தி வெளியிடும் ஆப்கான் பத்திரிக்கையாளர்களுக்கு கூடவா குரல் கொடுக்க கூடாது?

Share it if you like it

சில ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலைஞர் வாசகர் வட்டம் என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் பொழுது இவ்வாறு கூறியிருந்தார்.

அந்த மாநிலத்தில் இதுவரை ஒரு ஹரிஜன் கூட உயர் நீதிமன்ற நீதிபதியாக கிடையாது. ஆனால் தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு தான் வரதராஜரை நீதிபதியாக உக்கார வைத்தார். அதற்குப் பிறகு, 7-8 ஆதி திராவிட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் நீதிபதியாக இருந்தார்கள் என்றால் அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் மும்பையில் இருக்கிற ரெட்லைட் ஏரியா மாதிரி இருக்கிறது என்று கூறியது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

ஆனால் தமிழகத்தில் உள்ள முன்னணி ஊடகவியலாளர்கள் ஆர்.எஸ்.பாரதியின் இந்த அநாகரிகமான பேச்சுக்கு தனது கடும் கண்டனத்தையோ, எதிர்ப்பினையோ தெரிவித்தார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி.. இதுவே பா.ஜ.க-வை சேர்ந்த  நிர்வாகி ஒருவர் இப்படி கூறியிருந்தால். பல முன்னணி ஊடகங்களில் விவாதம் வைத்து ஒரு வாரம் தமிழகத்தையே  ஸ்தம்பிக்க வைத்து இருப்பார்கள் என்பது நிதர்சனம்.

ஆப்கானை தாலிபான்கள் கைப்பற்றிய பின்பு அப்பாவி பெண்கள், பெண் குழந்தைகள், படும் துயரத்தை அந்நாட்டு ஊடகவியலாளர்கள் உலக மக்களுக்கு தெரிவிக்க முயன்ற பொழுது ஆப்கான் பயங்கரவாதிகள் அவர்களை மிக கடுமையாக தாக்கி சம்பவத்திற்கு பத்திரிக்கையாளர்கள் பலர் தங்களின் கடும் கண்டனத்தை  தெரிவித்து வருகின்றனர்.

மும்பை ரெட் லைட் ஏரியா என்று விமர்சனம் செய்த தி.மு.க எம்.பி-க்கு தான் கண்டனம் தெரிவிக்கவில்லை நேர்மையாக உலக மக்களுக்கு செய்தி வெளியிடும் ஆப்கான் பத்திரிக்கையாளர்களுக்கு கூடவா  இவர்கள் குரல் கொடுக்க கூடாது? என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it