ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கே.பாப்பாங் குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வந்த கண்ணன்,கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளான நேற்றுகாலை, இவர் கமுதியிலிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். கே.பாப்பாங்குளம் செல்லும் வழியில் அவரை சிலர் வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.
இது குறித்து கமுதி டிஎஸ்பி இளஞ்செழியன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்தனர். இதில் தொடர்புடைய இலந்தைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரை கைது செய்து விசாரணை செய்தனர்.
கே.வேப்பங்குளத்தை சேர்ந்த முத்து அரியப்பனுக்கும், ஆசிரியர் கண்ணனுக்கும் கொடுக்கல் வாங்கல் தகராறில் முன்விரோதம் இருந்தது. அதனால் முத்து அரியப்பனின் தம்பி முருகன் முத்தாலங்குளத்தைச் சேர்ந்தவினோத்குமார் ஆகியோருடன் சேர்ந்து ஆசிரியரை வெட்டிக் கொலை செய்ததாக பாலமுருகன் வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து பாலமுருகனை போலீஸார் கைது செய்து முத்துஅரியப்பன் உள்ளிட்ட 3 பேரைதேடி வருகின்றனர். பள்ளி திறக்கும் முதல் நாளில் ஆசிரியர்வெட்டிக்கொலை செய்யப்பட்டதால் அப்பகுதி ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.