பகவத் கீதை படித்ததால் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இஸ்லாமிய மாணவி இஸ்கான் அமைப்பில் பேசிய காணொளி தற்பொழுது சமூகவலைத்தளத்தில் வைரலாக துவங்கியுள்ளது.
பள்ளி மாணவி அலிசா கான் என்பவர் இஸ்கான் அமைப்பு ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்பொழுது, பகவத் கீதை படிப்பதை குறித்து எனது தாயிடம் கூறினேன். ஆச்சயர்யமான விஷயம் என்னவென்றால், அதற்கு அவர் தடை விதிக்கவில்லை. அதேபோல, எனது தந்தை எனக்கு ஆதரவாக பேசினார். மேலும், மதத்தால் நாம் பிரிய கூடாது இந்தியர்கள் என்பதில் நாம் கர்வம் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
படிப்பில் நான் மிகவும் பின்தங்கி இருந்த பொழுது, பகவத் கீதை எனக்குள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது. அது எனக்கு புதிய நம்பிக்கையை அளித்தது. இஸ்கான் அமைப்பில் இருப்பவர்கள் அன்பானவர்கள் என்று மாணவி அலிசா கான் பகவத் கீதை பற்றி பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாக துவங்கியுள்ளது.
அதேபோல, கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜாஸ்னா சலீம். இவர் ஓவியம் வரைவதில் வல்லவர். இவரின் பெற்றோர் இவரை கண்ணா என்று அன்புடன் அழைத்து வந்துள்ளனர். பகவான் கண்ணன் புகைப்படத்தை முதன் முதலில் பார்த்த பொழுது இவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அன்றிலிருந்து, கிருஷ்ணர் படங்களை தொடர்ந்து வரைய துவங்கியுள்ளார். மேலும், வித விதமான முறையில் 500-க்கும் அதிகமான கிருஷ்ணர் படங்களை வரைந்துள்ளார். அந்தவகையில், கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளம் பகுதியில் புகழ் பெற்ற கிருஷ்ணசுவாமி கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலை, சேர்ந்த நிர்வாகிகள் இவர் வரைந்து வைத்திருக்கும் கிருஷ்ணர் படத்தில் ஒன்றினை வாங்கி தங்களது கோவிலில் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.