மதுரை திருப்பரங்குன்றம் கட்ராபாளையத்தில் உள்ள தனியார் விடுதியில், சுற்றுலா வந்ததாகக்கூறி மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எட்டு பேர் கொண்ட கும்பல் கடந்த 20ஆம் தேதி அறை எடுத்து தங்கி இருந்தனர். இந்நிலையில், நேற்று காலை அவர்கள் தங்கி இருந்த அறையிலிருந்து தண்ணீர் கேட்டுள்ளனர். அப்போது ரூம்பாய் வெளியே சென்றிருந்ததால் விடுதியின் மேனேஜர் அரசகுமார் என்பவர் தண்ணீர் எடுத்துச் சென்றுள்ளார். அப்போது அவர்கள் மதுரை சித்திரை திருவிழா நடைபெறுவதால் அங்கு மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்றும் அங்கு வருவோரிடம் கொள்ளை அடிக்கலாம் என்று ஹிந்தி மொழியில் பேசியுள்ளனர்.
இதனை கேட்ட மேனேஜர் அரசகுமார் ஒன்றும் தெரியாததுபோல் சுதாரித்து கொண்டு வெளியே வந்தார். பின்பு தனது அலைபேசியில் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நவ்சத், ஹின்னா கான், சப்னா ஷா, ஜெய்தா ஷா, அன்வர் ஷா, ஷமிம் ஷா, ராஜக் ஷா, ருக் ஷனா ஆகிய ஐந்து பெண்கள் உட்பட எட்டு பேரை கைது செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.