லோக்சபா தேர்தலுக்கு முன்பு தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசினர். அதில் குறிப்பாக காங்கிரஸ், ஏழை பெண்களுக்கு ஆண்டுதோறும் 1 லட்ச ரூபாய் கொடுப்பதாக கூறி உத்தரவாத அட்டைகளை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் எதிர்பாராத விதமாக உத்தரபிரதேசத்தில் இண்டி கூட்டணி அதிக இடங்களை பிடித்துவிட்டது. இந்நிலையில் லக்னோவில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் காங்கிரஸ் அலுவலகத்திற்கு வெளியே வரிசையாக நின்று பிரச்சாரத்தின் போது வாக்குறுதியளிக்கப்பட்ட ‘உத்தரவாத அட்டைகளை’ காண்பித்து பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதே சமயம் ஏற்கனவே அவற்றைப் பெற்ற மற்றவர்கள் தங்கள் கணக்குகளில் வாக்குறுதியளிக்கப்பட்ட பணத்தைப் பெறுவதற்கான படிவங்களைச் சமர்ப்பித்தனர். சிலர் தங்கள் விவரங்களை அளித்த பிறகு காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து ரசீதுகளைப் பெற்றதாகக் கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.