இலங்கை தமிழர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாதம் பிஸ்தா வழங்குமாறு தமிழக மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் தற்பொழுது மிக கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, பெட்ரோல் டீசல் அந்நாட்டில் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், எங்கு பார்த்தாலும் போராட்டம், ஆர்ப்பாட்டம், பசி, பஞ்சம், பட்டினி தலைவிரித்து ஆடி வருகிறது. இதுதவிர, வாகனங்கள் பலமணி நேரம் சாலைகளில் காத்து கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தொடர் மின் வெட்டு காரணமாக இலங்கை மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை மக்களின் துயரநிலையை கண்டு பல்வேறு நாடுகள் அவ்வபொழுது உதவி செய்து வருகின்றன. ஆனால், பா.ஜ.க தலைமையிலான மோடி அரசு மட்டுமே இன்று வரை உதவிகளை செய்து வருகின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தீவு தேசத்திற்கு இந்திய அரசாங்கம் பல்வேறு உதவிகளை செய்துள்ளது. “அண்டை நாடாகவும், நமது நாட்டின் பெரிய சகோதரராகவும், இந்தியா எப்போதும் எங்களுக்கு உதவி வருகின்றன. இந்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். தற்போதைய சூழ்நிலையில் எங்களைப் பொறுத்தவரை, உயிர்வாழ்வது எளிதானது அல்ல. நாங்கள் வெளியே வருவோம் என்று நம்புகிறோம் என இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா இந்தியா செய்த உதவியை நினைவு கூர்ந்து இருந்தார்.
இதனிடையே, இலங்கை மக்களின் துயர் துடைக்க தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் அந்நாட்டிற்கு உதவி செய்ய முன்வந்தன. இதற்கு, பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டசபையில் தி.மு.க அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கி இருந்தது. இதையடுத்து, இலங்கை மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, பால்பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் ஆகியவற்றை அனுப்பி வைக்க வேண்டும் என மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. இதற்கு, மோடி தலைமையிலான அரசு உடனே அனுமதியையும் வழங்கி இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் தான், இலங்கை மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்புவதற்காக நுகர் பொருள் வாணிப கழகம் சந்தை விலையை விட அதிக விலைக்கு அரசி வாங்குவதால் தமிழக அரசுக்கு 54 கோடி ரூபாய் இழப்பு என பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகி இருந்தன. அதுகுறித்தான, பத்திரிக்கை செய்தி இதோ.
இந்நிலையில், இலங்கை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் விதமாக பால்பவுடர், மளிகை சாமான் மற்றும் பாதம், பிஸ்தா உள்ளிட்ட பொருட்களை தந்து உதவுமாறு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காணொளி ஒன்றினை வெளியிட்டு தமிழக மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு சீமான் பேசிய காணொளியின் லிங்க் இதோ.