மறைந்த முன்னாள் முதல்வர் மரணம் குறித்தும், கொடநாடு சம்பவம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இது எங்களை பழிவாங்கும் நடவடிக்கை என்று அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்கள் முதல் பல முன்னணி நிர்வாகிகள் வரை பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது பழிவாங்கும் நடவடிக்கைக்கு அல்ல மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்து உள்ளார்.
சட்டம் தன் கடமையை செய்யும் என்றால் அண்மையில் தி.மு.கவை சேர்ந்த தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா தற்கொலை செய்து கொண்டது குறித்து மற்றும் தனது கணவரின் மர்ம மரணத்திற்கு பின்னால் தி.மு.க உள்ளதாக சாதிக் பாட்ஷா-வின் மனைவி தொடர்ந்து குரல் கொடுத்து வருவது குறித்தும் உரிய முறையில் விசாரணை நடத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்வர வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எப்படி இருந்த மனுஷன் 🙄😥😡
ஒரு காலத்துல இவரு பேச்சை எல்லாம் கேட்டு சில்லறை சிதற விட்டதை நினைச்சா… அட..ச்சே 🤦 pic.twitter.com/xfDTy7sVFC
— Rama Krishnan (@RK_Muthusamy) August 19, 2021