நேற்று மகாராஷ்டிராவில் உள்ள அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடியில் சுகாதாரம், ரயில், சாலை, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற துறைகளில் சுமார் ₹7500 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய மோடி, இரட்டை இயந்திரம்” அரசாங்கத்தின் மிக உயர்ந்த முன்னுரிமை ஏழைகளின் நலன் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய அவர், நாட்டின் பொருளாதாரம் விரிவடைந்து வருவதால் அதற்கான பட்ஜெட்டை அதிகரிப்பது குறித்தும் தெரிவித்தார். 70,000 கோடி ரூபாய் செலவழிக்கும் மகாராஷ்டிராவில் 1 கோடியே 10 லட்சம் ஆயுஷ்மான் கார்டுகளை ₹5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு பெறும் பயனாளிகளுக்கு விநியோகம் செய்வதாக அவர் குறிப்பிட்டார்.
86 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயனாளிகள் பயன்பெறும் வகையில் ‘நமோ ஷேத்காரி மகாசன்மன் நிதி யோஜனா’ திட்டத்தையும் அவர் தொடங்கினார்.
சிறு விவசாயிகளைப் பற்றிப் பேசுகையில், பிரதமர் கிசான் சம்மான் நிதியின் கீழ் சிறு விவசாயிகளுக்கு ₹26,000 கோடி உட்பட மகாராஷ்டிராவின் சிறு விவசாயிகளுக்கு ₹2,60,000 கோடி வழங்கப்பட்டது என்று பிரதமர் குறிப்பிட்டார். மகாராஷ்டிரா அரசு ‘நமோ ஷேத்காரி மஹாசன்மன் நிதி யோஜனா’ திட்டத்தைத் தொடங்கியுள்ளது மகிழ்ச்சி என்று அவர் தெரிவித்தார், இதன் கீழ் உள்ளூர் சிறு விவசாயிகளுக்கு ₹12,000 சம்மன் நிதி கிடைக்கும்
விவசாயிகளுக்கு அதிகாரமளிப்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று பிரதமர் வலியுறுத்தினார். ஏழு ஆண்டுகளில், ₹13.5-லட்சம் கோடி மதிப்பிலான உணவு தானியங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையின் கீழ் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், முந்தைய அரசாங்கத்தில் ஒரு மூத்த தலைவரின் ஆட்சிக் காலத்தில் இந்த எண்ணிக்கை வெறும் ₹3.5-லட்சம் கோடியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகள் 2014-க்குப் பிறகு ₹1-லட்சத்து 15 ஆயிரம் கோடி மதிப்பிலான கொள்முதல் செய்யப்பட்டன. இதற்கு முன்பு ₹500-600 கோடி மதிப்பிலான குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்முதல் செய்யப்பட்டது. இதன்மூலம் நேரடி பலன் பரிமாற்றம் ஊழலையும், கசிவையும் நீக்கியுள்ளது, என்றார்.
கரும்பு விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணம் வழங்குவதை உறுதி செய்வதற்காக, சர்க்கரை ஆலைகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்த எங்கள் அரசு செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் அதிகமான கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்படுகின்றன. சிறந்த சேமிப்பு மற்றும் பழைய சேமிப்பு வசதிகளை உறுதி செய்வதற்காக, PAC கள் மற்றும் கூட்டுறவுகளுக்கு வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 7,500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பு ஏற்கனவே செயல்படுவதால், சிறு விவசாயிகள் FPOக்கள் மூலம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.