தி.மு.க.வின் தீவிர ஆதரவாளரும் பிரபல ஆபாச பேச்சாளருமான நாஞ்சில் சம்பத், ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை விமர்சனம் செய்து இருந்தார். இதுகுறித்து, அவரிடம் பிரபல ஊடகத்தின் நெறியாளர் விளக்கம் கேட்ட பொழுது திமிர் தனமாக அவர் பதில் அளித்துள்ள காணொளி பொதுமக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிறந்த எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகதன்மை கொண்டவர். மேலும், தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவராக இருந்தவர் டாக்டர். தமிழிசை செளந்தரராஜன். தமிழக மக்களின் பெரும் ஆதரவையும், அன்பையும் பெற்றவர். இவர், தற்பொழுது புதுவை மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநராக இருந்து வருகிறார். சமீபத்தில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் – மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அப்பொழுது, தி.மு.க.வின் தீவிர ஆதரவாளரான நாஞ்சில் சம்பத்தால் தனக்கு ஏற்பட்ட மனக்காயத்தை வேதனையுடன் குறிப்பிட்டு இருந்தார். ஒரு தமிழ் பெண் இரு மாநிலங்களில் ஆளுநராக இருப்பதை தமிழக மக்கள் பெருமையுடன் பார்த்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில், ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை அவள் என்று ஒருமையில் பேசிய நாஞ்சில் சம்பத்திற்கு கண்டனங்களு குவிந்து வருகிறது. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூட தனது கடும் கண்டனத்தை பதிவு செய்து இருந்தார். மேலும், பொதுமக்கள் உட்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வழக்கம் போல, தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இன்று வரை வாய் திறக்காமல் கள்ள மெளனம் காத்து வருகின்றனர். மேலும், பெண் உரிமை, பெண் விடுதலை என தொடர்ந்து வாய் கிழிய பேசி வரும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, தி.மு.க எம்பி கனிமொழி தற்சமயம் வரை கப்சிப். அந்த வகையில், பிரபல ஊடகமான நியூஸ் 18-க்கு ஆபாச பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டியில் இவ்வாறு பேசியுள்ளார்.
ஆளுநர் தமிழ் பல்கலைகழகத்திற்கு பேச சென்றால் தமிழ் பற்றியும், பல்கலைகழகத்தை பற்றியும் தான் பேச வேண்டும். நாஞ்சில் சம்பத் பற்றி பேசியிருக்க கூடாது. அத்துமீறி இருக்கிறார் தெலுங்கானா ஆளுநர், அதிகார துஷ்பிரயோகம் செய்து இருக்கிறார் தெலுங்கானா ஆளுநர். சித்திரவதை செய்து என்னை கொன்றாலும், வருத்தம் தெரிவிக்க சாத்தியமில்லை என மிகுந்த ஆணவத்துடன் பேசியுள்ளார். விடியல் ஆட்சியில் பெண்கள், பெண் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு தான் பாதுகாப்பு இல்லை என்றால், ஆளுநருக்கு கூட உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று நெட்டிசன்கள் ஸ்டாலின் அரசை விமர்சனம் செய்து வருகின்றனர்.