பிரபல நெறியாளர் பாண்டே தனது யூ டியூப் சேனலில் தி.மு.க ஆதரவாளர் நாஞ்சில் சம்பத்திடம் நேர்காணல் நடத்தியுள்ளார். இதற்கு, அவர் அளித்த மழுப்பலான பதில் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க.வின் தீவிர ஆதரவாளர் மற்றும் சமீபத்தில் தமிழக முதல்வரிடமிருந்து அண்ணா விருது பெற்றவர் நாஞ்சில் சம்பத். இவர், தனக்கு பிடிக்காதவர்களை மிகவும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்ய கூடியவர். மாற்று கட்சியை சேர்ந்த தலைவர் ஒரு பெண்ணாக இருந்தாலும் கூட, அவர்களுக்கு உரிய மரியாதை வழங்காமல் இழிவுப்படுத்தி பேசுவதை நோக்கமாக கொண்டவர். அரசியல் கட்சிகளுக்கு மைக் செட் வாடகைக்கு விடுவது போல் தனது வாயை வாடகைக்கு விடும் நபர் என்பது பலரின் குற்றச்சாட்டு.
பா.ஜ.க, பாரதப் பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களை இன்று வரை மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இப்படியாக, தி.மு.க.விற்கு ஆதரவாகவும் மாற்று கட்சியை சேர்ந்தவர்களை தொடர்ந்து அவமதித்து பேசி வருகிறார். அந்த வகையில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் – மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசும்போது தி.மு.க ஆதரவாளர் நாஞ்சில் சம்பத்தால், தனக்கு ஏற்பட்ட வலியை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வேதனையுடன் குறிப்பிட்டு இருந்தார்.
ஆளுநரை ஒருமையில் விமர்சனம் செய்த நாஞ்சில் சம்பத்திற்கு, தமிழகம் முழுவதிலுமிருந்து கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன. இதற்கு, தி.மு.கவோ மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்களோ வழக்கம் போல கப்சிப். தமிழகத்தில், சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்றால் நாஞ்சில் சம்பத் மீது ஏன்? கடும் நடவடிக்கை எடுக்கவில்லை, என்ற குரல் இன்றும் ஒலித்து கொண்டு இருக்கிறது. எனினும், ஸ்டாலின் அரசு நாஞ்சில் சம்பத் மீது எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்தநிலையில் தான், பிரபல நெறியாளர் பாண்டே தனது யூ டியூப் சேனலான சாணக்கியாவில், நாஞ்சில் சம்பத்திடம் நேர்காணல் நடத்தியுள்ளார். இவர், எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு சம்பத் மழுப்பலான முறையில் பதில் அளித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
அதன் லிங்க் இதோ.