தமிழக ஆளுநர் மாளிகையில் அக்டோபர் 3ம் தேதி (வியாழக்கிழமை) முதல் அக்டோபர் 12ம் தேதி (சனிக்கிழமை) வரை மாலை 04:00 மணி முதல் 06:00 மணி வரை நடைபெறும் ‘நவராத்திரி கொலு விழா கொண்டாட்டங்களில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆளுநரின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது :-
தமிழ்நாடு, ஆளுநர் மாளிகையில் ‘நவராத்திரி கொலு 2024’ அக்டோபர் 3ம் தேதி (வியாழக்கிழமை) முதல் அக்டோபர் 12ம் தேதி (சனிக்கிழமை) வரை கொண்டாடப்படுகிறது. இவ்விழாவினை மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என். ரவி, அவர்கள் அக்டோபர் 3, 2024 அன்று, சென்னை, ஆளுநர் மாளிகையில் தொடங்கி வைக்கவுள்ளார்கள்.
தினமும் மாலை 04:00 மணி முதல் 05:00 மணி வரை நடைபெறும் வழிபாடு நிகழ்ச்சியிலும் மற்றும் மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சி கொண்டாட்டங்களில் தனிநபர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்துக் கொள்ளலாம்.
ஆர்வமுள்ள தனிநபர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செப்டம்பர் 30, 2024 க்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்களில் தங்களது பெயர், வயது, பாலினம், முகவரி, கைப்பேசி எண், வருகைக்கான தேதி மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று போன்ற விவரங்கள் இருக்க வேண்டும்.
‘முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக 150 பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு அவர்களுக்கான ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தினை உறுதிப்படுத்தும் மின்னஞ்சல் அனுப்பப்படும். பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்னதாக, ஆளுநர் மாளிகை இரண்டாம் நுழைவாயில் வழியாக வந்தடைய வேண்டும். தங்களுக்கு அனுப்பப்பட்ட உறுதிப்படுத்திய மின்னஞ்சலின் நகல் மற்றும் அசல் புகைப்பட அடையாளச் சான்றினை
உடன் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆர்வமுள்ள வெளிநாட்டினரும் ‘நவராத்திரி கொலு 2024’
கொண்டாட்டங்களில் கலந்துக்கொள்ள வரவேற்கப்படுகிறார்கள். அவர்களின் அசல் கடவுச்சீட்டு மட்டுமே அடையாளச் சான்றாக
ஏற்றுக்கொள்ளப்படும். இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
I am interested to attend as a guest for Navarathri Golu Festival at Raj Bhavan on 7.October 2024