தமிழகத்தில் ஊழலற்ற நல்லாட்சி தேவை : திமுகவை அகற்ற வேண்டும் – சரத்குமார் !

தமிழகத்தில் ஊழலற்ற நல்லாட்சி தேவை : திமுகவை அகற்ற வேண்டும் – சரத்குமார் !

Share it if you like it

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க சார்பில் மாபெறும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், நடிகர் சரத்குமார் கலந்து கொண்டு பேசுகையில், பிரதமர் மோடியின் தமிழகம் மற்றும் இந்தியாவுக்கு செய்த நலத்திட்டங்கள் மற்றும் நல்ல கருத்துக்களை மக்கள் மனதில் பதியவைப்பேன்.

கடந்த 1979-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் மட்சு ஆற்றில் வெள்ள பெருக்கெடுத்து மக்கள் உயிருக்கு போராடியபோது மக்களை காப்பாற்றியவர் மோடி. அன்று மக்களை காப்பாற்ற 29 வயதில் இறங்கியிருக்கிறார் மோடி.

ஏழை குடும்பத்தில் பிறந்து உழைப்பால் உயர்ந்தவர் மோடி. சாதாண மக்களும் அரசியலில் வெற்றி பெறலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு பிரதமர் மோடி. ஆனால் தமிழகத்தில் குடும்ப அரசியல் நடந்துகொண்டிருக்கிறது. வாரிசு அரசியல் நடந்து கொண்டுள்ளது.

கடந்த 2025-ம் ஆண்டு அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா இருக்கும். அப்போது, இளைஞர்களை வழிநடத்த மோடி வேண்டும். மோடியின் ரசிகனாக பயணித்த நான் இப்போது தொண்டனாக இணைந்துள்ளேன்.

நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடி நல்ல ஆட்சி செய்து வருகிறார். தமிழகத்தில் ஊழல் ஆட்சி அகற்றப்படவேண்டும். கடந்த 57 ஆண்டுகள் திராவிட கட்சிகள் ஆட்சி செய்து நாட்டை அழித்துவிட்டார்கள். திராவிடம் என்பது குடும்ப ஆட்சி, மன்னராட்சி. தொண்டன் தலைமைக்கு வரமுடியாத கட்சி தி.மு.க. எனவே, தமிழகத்தில் ஊழலற்ற நல்லாட்சி தேவை. திமுகவை அகற்ற வேண்டும். அதற்கு உங்கள் ஆசி தேவை என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிறப்பாக பணியாற்றி வருகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வரவேண்டும், அதற்காக தாமரை ஒவ்வொரு மாநிலங்களிலும் மலரவேண்டும். அதற்கு, தமிழகம் புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்றார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *