நீட் தேர்வுக்கு எதிராக திமுக இளைஞரணி மற்றும் மருத்துவரணி, மாணவர் அணி ஆகியவை சார்பில் கையெழுத்துஇயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கையெழுத்து பெற, அமைச்சர் உதயநிதி நேற்று சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ்தலைவர் கு.செல்வப்பெருந்தகை, மூத்த தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரிடம் கையெழுத்து பெற்றார்.
இதன்படி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்தை பெற திட்டமிட்டிருக்கிறோம். இணையதளம் மூலமாக 3 லட்சம் கையெழுத்து பெற்றிருக்கிறோம். இதுவரை 8 லட்சம் அஞ்சல் அட்டைகளில் கையெழுத்து வாங்கியுள்ளோம். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் சந்தித்து அவர்களிடம் கையெழுத்து பெற இருக்கிறேன். இவ்வாறு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கூறினார்.
நீட் தேர்வை கொண்டு வைத்ததே காங்கிரஸ் ஆட்சியில் தான். ஆனால் தற்போது திமுகவும் காங்கிரசும் சேர்ந்து நீட் தேர்வை ஒழிக்க நாடகம் நடத்தி வருகிறார். மக்களை பார்த்தால் முட்டாளாக தெரிகிறதா இவர்களுக்கு ? இவர்களே ஒண்டு வருவார்கள், இவர்களே ஒழிப்பதை போல் நாடகமாடுவார்கள். இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம்ம நாட்டிலே என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.