காஞ்சிபுரத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 89 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று வரலாற்று சாதனையை நிகழ்த்தி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏழை, எளிய மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு கொண்டு வந்த தேர்வு தான் நீட் தேர்வு. இதற்கு, தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் தங்களது கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருந்தன. மேலும், நீட் தேர்விற்கு எதிராக தொடர்ந்து அவதூறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தனர்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம். “நீட் தேர்வை ரத்து செய்வது எப்படி? என்கிற ரகசியம் எங்களுக்கு நன்கு தெரியும்” என்று கூறியவர் உதயநிதி ஸ்டாலின். மேலும், கொஞ்சமாவது வெட்கம், மானம், சூடு, சொரணை இருக்க வேண்டும் என்று முந்தைய அ.தி.மு.க. அரசையும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் மிகக் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். இப்படிப்பட்ட சூழலில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்களில் 89 மாணவர்கள் தேர்ச்சி பெற்று வரலாற்று சாதனையை நிகழ்த்தி இருக்கின்றனர்.



