2024-25ஆம் கல்வி ஆண்டின் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைப்பெற்றது.
சுமார் 24 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பத்தனர். தமிழகத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர்.
தேர்வு முடித்துவிட்டு வெளியே வந்த மாணவர்களிடம் தேர்வு எப்படி இருந்தது என்று கேட்டதற்கு, வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாகவும் கண்டிப்பாக தான் நினைத்த மதிப்பெண்கள் எடுப்போம் என்றும் மாணவ மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.
திமுக ஆட்சியில் நான்காவது முறையாக நீட் தேர்வு நடக்கிறது.
வருடாவருடம் நீட் எழுதி வெற்றி பெறும் மாணவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மாணவர் மத்தியில் உள்ள வரவேற்பை காட்டுகிறது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக ஜே.பி நட்டா அவர்கள் இருந்தபோது தமிழகத்தில் கண்டிப்பாக நீட் தேர்வு நடக்கும் என்றும் தமிழக கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இதன் அடிப்படையில் கிராமப்புற மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் வழங்கியது.
இந்த சிறப்பு ஒதுக்கீட்டினால் கிராமப்புற மாணவ மாணவிகள் மகிழ்ச்சி அடைந்து, மிகவும் ஆர்வமாக நீட் தேர்வை ஆதரித்து வரவேற்பு அளித்தனர். மேலும் இந்த 7.5 சிறப்பு ஒதுக்கீடு இருப்பதனால் ஏழை மாணவர்கள் கூட மருத்துவராக முடிகிறது. அதனால் நீட் கண்டிப்பாக வேண்டும் என்று மாணவிகள் பேசியுள்ள காணொளி தற்போது வைரலாகி வருகிறது.
இந்நிலையில் நீட் தேர்வில் தொடர்ந்து தேர்ச்சி விகிதம் அதிகரித்து வரும் நிலையில் நேற்று நடந்த நீட் நீர்வானது மிகவும் எளிமையாக உள்ளதென்று மாணவ மாணவிகள் தங்கள் கருத்துக்களை கூறிய நிலையில், நீட் தேர்வை எதிர்த்து பொய் பிரச்சாரம் செய்து வந்த திமுக அமைச்சர் உதயநிதி லண்டனுக்கு சென்று ஒளிந்துகொண்டார்.