டெல்லியில் உள்ள நேரு அருங்காட்சியகத்தின் பெயரை பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நூலக சொசைட்டி என மத்திய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் நேருவின் புகழ் பெயரில் இல்லை என்றும் பெயர் மாற்றத்தால் எந்த பயனும் ஏற்படாது எனவும் ராகுல் தெரிவித்துள்ளார்.