‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் முழுக்க முழுக்க திராவிட சிந்தா்தங்களை திணித்து எடுக்கப்பட்டிருப்பதால், படம் அனைவரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். ஆகவே, படம் ஓரிரு தினங்களில் தியேட்டரை விட்டு ஓடலாம் என்பதால் பேதியில் இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், திரைப்பட நடிகராகவும் இருந்து வருகிறார். மேலும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்கிற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவரது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ஹிந்தியில் ‘ஆர்ட்டிக்கிள் 15’ என்கிற பெயரில் வெளியான படத்தை தமிழில் ரீமேக் செய்து, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய ‘நெஞ்சுக்கு நீதி’ புத்தகத்தின் தலைப்பிலேயே படத்தின் பெயரையும் சூட்டி இருக்கிறார்கள். இப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க, கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலினே நடத்திருக்கிறார். தான்யா ராஜேந்திரன் கதாநாயகியாக நடிக்க, காமெடி நடிகர் பரோட்டா சூரியும் நடித்திருக்கிறார்.
இந்தப் படம் ‘ஆர்ட்டிக்கிள் 15’ படத்தின் தமிழ் ரீமேக் என்று கூறப்பட்டாலும், ஈரோடு ராமசாமியை உயர்த்திப் பிடிக்கும் வகையில், பல்வேறு காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. மேலும், ராமசாமியை தாங்கிப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, அம்பேத்கரையும் வலிய திணித்திருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் ஜாதிய ஏற்றதாழ்வுகளை காட்டுகிறோம் பேர்வழி என்று சொல்லி, ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமுதாயத்தினரை இழிவுபடுத்தியதுபோல, இப்படத்தில் பிராமணர்களையும், கொங்கு கவுண்டர்களையும் இழிவுபடுத்தி பல்வேறு காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இதுதான் காண்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறது. மேலும், பிராமணர்கள் மற்றும் கொங்குக் கவுண்டர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு, சாதாரணமாகவே உதயநிதிக்கு நடிக்கத் தெரியாது. அப்படி இருக்க, இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக வேடம் ஏற்றிருப்பதால், நடிப்பில் டோட்டல் சொதப்பல். இதனால், படம் படுதோல்வி அடையும் என்பதே பலரது கருத்தாக இருக்கிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில், படம் ரிலீஸான முதல்நாளே பல தியேட்டர்களில் பாதிக்கும் மேற்பட்ட சீட்கள் காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், படத்தை வெற்றிப்படமாக்க வேண்டும் என்று தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு வாய்மொழியாக உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, தங்களது பதவி நிலைக்க வேண்டுமே என்பதற்காக அமைச்சர்களும், தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வேண்டுமே என்பதற்காக எம்.எல்.ஏ.க்களும், அடுத்த முறை எம்.எல்.ஏ. சீட் வாங்கி விட வேண்டும் என்பதற்காக மாவட்டச் செயலாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு, தியேட்டர்களின் மொத்த டிக்கெட்டையும் வாங்கி, உ.பி.க்களுக்கு இலவச விநியோகித்து படம் பார்க்கச் சொல்லி வருகிறார்கள். மேலும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் தியேட்டருக்குச் சென்று படம் பார்த்துவிட்டு, தலைமைக்கு தெரியவேண்டுமே என்பதற்காக, தாங்கள் படம் பார்ப்பதை போட்டோ எடுத்து தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள். தவிர, தி.மு.க. ஐ.டி. விங்கைச் சேர்ந்தவர்களும், படத்தை வெற்றிப்படமாக்க பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகின்றனர். எனினும், படம் அட்டர் பிளாப் என்பதால் ஓரிரு நாட்கள் தாக்குப் பிடிப்பதே கடினம் என்கிறார்கள் படம் பார்த்து விட்ட திரும்பிய பொதுமக்கள்.
இது ஒருபுறம் இருக்க, ஜெய்பீம் படத்தில் தங்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகளை அமைத்ததால், நடிகர் சூர்யா மீதும், இயக்குனர் ஞானவேல் மீதும் வன்னியர் சமூகத்தினர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்ததோடு, போலீஸிலும் புகார் செய்திருந்தார். இதன் பேரில் சூர்யா, ஞானவேல் மீது வழக்குப் பதிவு செய்யும்படி போலீஸாருக்கு கோர்ட் உத்தரவிட்டது நினைவிருக்கலாம். அதேபோல, நெஞ்சுக்கு நீதி படத்தில் பிராமணர்களையும், கொங்கு கவுண்டர்களையும் இழிவுபடுத்தி காட்சிகள் அமைத்த நடிகர் உதயநிதி மீதும், இயக்குனர் அருண்ராஜா காமராஜ் மீதும் வழக்குத் தொடர, மேற்கண்ட இரு சமூகத்தினரும் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், படத்துக்கும், நடிகர் உதயநிதி, இயக்குனர் அருண்ராஜா காமராஜ் ஆகியோருக்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.