சமீபத்தில் நடந்து உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி வியாழன் அன்று காலை பார்படாஸில் இருந்து வந்தவுடன் அவரது இல்லத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுடன் உரையாடும் வீடியோவை X இல் வெளியிட்டார்.
இந்தியாவின் மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடியை டெல்லியில் சந்திக்கும் வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்தது ஒரு மறக்கமுடியாத சந்தர்ப்பம்” என்று BCCI பதிவிட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு பாகிஸ்தானை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றதாக கடையில் வாங்கிய கோப்பையைக் காட்டி, முதலமைச்சர் ஸ்டாலினை மாற்றுத்திறனாளி வீரர் ஏமாற்றிய சம்பவம் தமிழகத்தில் அரங்கேறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் இந்த இரண்டு சம்பவங்களையும் இணைத்து முதல்வர் ஸ்டாலினை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.