சில ஆண்டுகளுக்கு முன் பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி உட்பட சில பெண்கள் Metoo மூலம் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி இருந்தனர். ஏன் அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சின்மயி மற்றும் வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு. எப்படி ஓ.என்.வி விருதை வழங்கலாம் என்றும். அவருக்கு அந்த விருதை கொடுக்கக்கூடாது என்று கேரள திரை உலகத்தினர் பலர் போர் கொடி உயர்த்தினர். மேலும் கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை பார்வதியும் தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருந்தார். ‘பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அவரது பெயரில் விருது வழங்கப்படுவது மிகுந்த அவமரியாதைக்குரியது’ என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
Metoo கவிஞருக்கு எதிராக தொடர்ந்து கடும் விமர்சனங்களும், பாலியல் புகார் சர்ச்சை காரணமாக அவருக்கு வழங்கப்படவிருந்த கேரளாவின் மிக உயரிய விருதான ஓ.என்.வி விருது குறித்து மறுபரிசீலனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இதனை அடுத்து கவிஞர் வைரமுத்து, சர்ச்சைகள் காரணமாக எனக்கு வழங்கப்பட்ட ஓ.என்.வி விருதை திரும்ப அளிப்பதாகவும், மேலும் அந்த 3 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையுடன். எனது பங்கான ரூ. 2 லட்சத்தையும் சேர்த்து ரூபாய் 5 லட்சத்தை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அளிப்பதாக அண்மையில் காணொளி வாயிலாக தெரிவித்து இருந்தார் வைரமுத்து.
இதனை அடுத்து ஓ.என்.வி பண்பாட்டு குழு இவ்வாறு கருத்து தெரிவித்து உள்ளது.
நாங்கள் கவிஞர் வைரமுத்துவுக்கு அந்த விருதை இன்னும் வழங்கவேயில்லை என்றும், வழங்காத விருதை அவர் எப்படி திரும்ப கொடுக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளது..