ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த உத்தரப்பிரதேச அரசாங்கம் புதிய சட்டத்தின் வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் அரசு வேலை போன்ற பல சலுகைகள் ரத்துச் செய்யப்படும்.ஒரு குழந்தை பிறந்த பிறகு குடும்ப கட்டுப்பாடு செய்துக் கொண்டால் இலவச மருத்துவ காப்பீடு போன்ற பல அத்தியாவசிய சேவைகள் இலவசமாக அரசு ஏற்பாடு செய்து தரும்.
சில மதத்தினர் மூன்று அல்லது நான்கு திருமணங்கள் செய்யும் பழக்கம் உடையவர்கள் என்பதால் அனைத்து திருமணங்களையும் ஒரே திருமணமாக கருத்தில்கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் சலுகைகள் ரத்து செய்யப்படும்.
இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் திட்டமிட்டே பல குழந்தைகளைப் பெற்று அவர்களின் ஜனத்தொகையை பெருக முயற்சித்து வருவதாக பல ஆதாரங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த சூழலில், உத்தரபிரதேச மாநில அரசு இதுபோன்ற ஒரு முடிவை எடுத்து இருப்பதை நாடு முழுவதும் உள்ள அறிவார்ந்த மக்கள் பாராட்டி வருகிறார்கள்.
நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் குழந்தைகளை எவ்வளவு வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் அதில் எந்த தடையும் கிடையாது. ஆனால் அரசு சலுகைகள் பெறுவதில் மட்டுமே சில நிபந்தனைகளை கொண்டுவந்து உள்ளனர்.
ஆகையால் ஜனநாயகத்திற்கு உட்பட்ட இந்த சட்டத்தை விரைவில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த வேண்டும் என்று பெரும்பாலான மக்களின் கருத்தாக ஒலித்து வருகின்றது.