‘பொறுக்கி’ நாஞ்சில் சம்பத் பேச்சால் பா.ஜ.க.வினர் கொந்தளிப்பு!

‘பொறுக்கி’ நாஞ்சில் சம்பத் பேச்சால் பா.ஜ.க.வினர் கொந்தளிப்பு!

Share it if you like it

தி.மு.க.வைச் சேர்ந்த பேச்சாளர் ‘இன்னோவா’ நாஞ்சில் சம்பத், பா.ஜ.க.வினரை பொறுக்கி என்று கூறியதால் பா.ஜ.க.வினர் ஆவேசமடைந்து, தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி மக்கள் சபை என்கிற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதில், பல்வேறு அரசியல் கட்சிகளின் பேச்சாளர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் மாற்றுக்கட்சியின் பேச்சாளர்கள் தங்களது கட்சியை விமர்சித்து பேசும்போது, அமளியில் ஈடுபடுவது அவ்வப்போது அரங்கேறி வருகிறது. அந்தவகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்றைய தமிழ்நாடு பெரியார் மண்ணா, ஆன்மிக மண்ணா என்கிற தலைப்பில் நடந்தது. பெரியார் மண் என்கிற தலைப்பில் தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ. கோவி.செழியன், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அருள்மொழி, பாதிரியார் ஜெகத் கஸ்பார் ஆகியோர் பேசினர்.

ஆன்மிக மண் என்கிற தலைப்பில் பா.ஜ.க.வைச் சேர்ந்த பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன், தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன், ஆன்மிக சொற்பொழிவாளர் மணிகண்டன் ஆகியோர் பேசினர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அருள்மொழி, ஹிந்து மதத்தைப் பற்றி அவதூறாகப் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க. மற்றும் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அருள்மொழி பேச்சுக்கு ஆட்சேபம் தெரிவித்து, அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்கள் சபை நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, மக்கள் சபை நிகழ்ச்சி சிறிது நேரம் தடைபட்டு, அதன் பிறகு மீண்டும் நடத்தப்பட்டது.

இந்த சூழலில்தான், நேற்று நடந்த மக்கள் சபை நிகழ்ச்சியில் பா.ஜ.கவினரை பொறுக்கிகள் என்று இன்னோவா நாஞ்சில் சம்பத் பேசி, பிரச்னையை கிளப்பி விட்டிருக்கிறார். நியூஸ் 18 தொலைக்காட்சி சார்பில், இனம், மொழி அரசியலை பேசுவது உரிமைக்காகவா, வாக்குக்காகவா என்கிற தலைப்பில் ஈரோடு வேளாளர் கல்லூரி அரங்கத்தில் மக்கள் சபை நிகழ்ச்சியை நடத்தியது. உரிமைக்காக என்கிற தலைப்பில் தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர் மனோ.தங்கராஜ், அக்கட்சியின் பேச்சாளர் இன்னோவா புகழ் நாஞ்சல் சம்பத், திராவிடர் கழக ஆதரவாளர் வே.மதிமாறன் ஆகியோர் பேசினர். அதேபோல, வாக்குக்காக என்கிற தலைப்பில் பா.ஜ.க.வைச் சேர்ந்த பேராசிரியர் ஸ்ரீநிவாசன், இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜூன் சம்பத், திரைப்பட இயக்குனர் பேரரசு ஆகியோர் பேசினர்.

இந்த நிகழ்ச்சியில்தான், நாஞ்சில் சம்பத் பேசும்போது, பா.ஜ.க.வினர் பொறுக்கிகள் என்று கூறியிருக்கிறார். இது, அரங்கத்தில் இருந்த பா.ஜ.க.வினர் மற்றும் பா.ஜ.க. ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உடனே, இருக்கைகளை விட்டு எழுந்த பா.ஜ.க.வினரும், அக்கட்சியின் ஆதரவாளர்களும், யாருடா பொறுக்கி, நீதான்டா பொறுக்கி. பல கட்சிகள் மாறிய பரதேசி. மரியாதையாக மன்னிப்புக்கேள் என்று கூச்சலிட்டதோடு, மேடையில் ஏறி நாஞ்சில் சம்பத்தை தாக்கவும் முயன்றனர். இதனால், அரங்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எவ்வளவோ முயன்றும், பா.ஜ.க.வினரை தடுக்க முடியவில்லை.

இதையடுத்து, நாஞ்சில் சம்பத் ஓடி ஒளிந்து கொண்டார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரை ஒரு மறைவான இடத்தில் கொண்டு வைத்தனர். இதன் பின்னர், பா.ஜ.க.வைச் சேர்ந்த பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன், தொண்டர்களை அமைதிப்படுத்தினார். அப்படி இருந்தும் தொண்டர்கள் அமைதியாகவில்லை. பிறகு, கருத்தை கருத்தால் எதிர்கொள்வோம். பா.ஜ.க.வினர் பொறுக்கிகள் அல்ல, பொறுக்கி எடுத்த முத்துக்கள் என்று உணர வைப்போம் என்று ஏதேதோ கூறி, பா.ஜ.க.வினரை அமைதிப்படுத்தினார். இதன் பிறகே தொண்டர்கள் அமைதியாகினர். பின்னர், நிகழ்ச்சி தொடர்ந்து நடந்தது. இச்சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Share it if you like it