Share it if you like it
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி அளித்து வருதல் தொடர்பாக சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச்சட்டத்தின் கீழ் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை கடந்த ஆண்டு 2022 செப்டம்பர் 28 அன்று, இந்திய அரசாங்கம் PFI ஐ “சட்டவிரோத சங்கம்” என்று அறிவித்தது மற்றும் UAPA சட்டத்தின் கீழ் அந்த அமைப்பை ஐந்து ஆண்டுகளுக்கு தற்காலிகமாக தடை செய்தது.
இந்நிலையில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி அளித்து வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு எதிராக டில்லி, மஹாராஷ்டிரா, தமிழ்நாடு என பிற மாநிலங்களில் புதன்கிழமை அதிகாலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பானது (என்ஐஏ) சோதனை நடத்தி வருகிறது. கேரளத்தின் வயநாடு,கோழிக்கோடு,கொச்சின் உள்ளிட்ட சில பகுதிகளிலும் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
Share it if you like it