நான் ஒரு சர்வதேச பயங்கரவாதி என சீமான் பேசிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவரது, பேச்சுக்கள் அனைத்தும் பிரிவினையை தூண்டும் விதமாகவும், தேசத்திற்கு விரோதமாகவும் இன்று வரை இருந்து வருகிறது. அந்த வகையில், இவர் அளந்து விடும் பொய்களுக்கும், கட்டுக்கதைகளுக்கும் ஒரு முடிவே இல்லை என்றே சொல்லலாம். இப்படிப்பட்ட சூழலில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட சீமான் இவ்வாறு பேசினார்;
சென்னை விமான நிலையத்தில் பணி செய்யும் அதிகாரிகளில் 90% சதவீதம் பேர் பிற மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள். யார்? வந்தாலும் அடையாள அட்டையை காட்டு என கேட்கிறார்கள். டேய், நான் சர்வதேச தீவிரவாதி டா என்னிடமா ஐ.டி கார்டு கேட்கிறே என பேசியிருக்கிறார். தன்னை ஒரு தீவிரவாதி என்று ஒப்புக் கொண்ட சீமானை என்.ஐ.ஏ. அமைப்பு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
ஜம்மு & காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத் தலைவராக இருந்தவன் முகம்மது யாசின் மாலிக். இவன், 1990-ல் 4 இந்திய விமான படை வீரர்களை கொன்றவன். ஹிந்து பண்டிட்களை கொடூரமான முறையில் படுகொலை செய்தவன் என்று சொல்லப்படுகிறது. மேலும், பல அப்பாவி ஹிந்து பெண்கள் பாலியல் வன்கொடுமைகளை அனுபவிக்கவும், லட்சக்கணக்கான பண்டிட்களை அகதிகளாக மாற்றியவன் என பல குற்றச்சாட்டுகள் யாசின் மீது உண்டு. இதுதவிர, பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்த வழக்கில் என்.ஐ.ஏ. நீதிமன்றம் அண்மையில் இவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் தான், யாசினின் மிக நெருங்கிய கூட்டாளியான சீமான் நான் ஒரு பயங்கரவாதி என பேசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.