விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘நிலை மறந்தவன்’ திரைப்படம் கண்டிப்பாக கிறிஸ்தவர்கள் பார்க்க வேண்டிய படமாகும்.
மலையாளத்தில் ‘ட்ரான்ஸ்’ என்ற பெயரில் 2020-ம் ஆண்டு வெளிவந்த படத்தை, 2 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் டப் செய்து ‘நிலை மறந்தவன்’ என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். மலையாளத்தில் சக்கைப்போடு போட்ட இப்படம் விரைவில் தமிழகத்தில் திரைக்கு வரவிருக்கிறது. படத்தின் ஒன்றை வரிக் கரு என்னவென்றால், இவாஞ்சலிஸ்ட் எனப்படும் கிறஸ்தவர்கள் ஹிந்துக்களை எப்படி எல்லாம் ஏமாற்றி மூளைச்சலவை செய்து முட்டாளாக்கி மதம் மாற்றுகிறார்கள் என்பதுதான். ஆனால், அதை இயக்குனர் சொல்லி இருக்கும் விதம்தான் மிகவும் அற்புதம். உதாரணமாக, கால் ஊனமுற்றவரை நடக்க வைப்பது, கண் பார்வையற்றவருக்கு பார்வை கொடுப்பது, கேன்சர் நோயை குணப்படுத்துவது உட்பட பல்வேறு மாயாஜால வித்தைகளை ஃபாஸ்டர் எனப்படும் கிறஸ்தவ மத வியாபாரிகள் எப்படி எல்லாம் அரங்கேற்றுகிறார்கள் என்பதை வெட்டவெளிச்சமாக காட்டி இருக்கிறார்கள் இப்படத்தில்.
அதாவது, உண்மையிலேயே நடக்க முடிந்த ஒருவரை வீல் சேரில் அழைத்து வந்து, அவரை ஊனமுற்றவர் போல சித்தரித்து, பிறகு அவர் ஜெபத்தின் மூலம் நடப்பதுபோல எப்படி எல்லாம் செட்டப் செய்கிறார்கள் என்பதை தோலுரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர். சுருக்கமாகச் சொன்னால், கிறிஸ்தவ பாதிரியார்களான பால் தினகரன், எஸ்ரா.சற்குணம், மோகன் சி லாசரஸ் உள்ளிட்டோர் ஹிந்துக்களை மதம் மாற்றுவதற்காக என்னென்ன சித்து வேலைகளை எல்லாம் அரங்கேற்றினார்கள் என்பதை விவரிக்கும் படம்தான் இது. சி.டி.யை வயிற்றில் வைத்தால் கல்லீரல், கிட்னி நோய் குணமாகும். கையை வயிற்றில் வைத்து ஜெபித்தால் கர்ப்பம் தரிக்கும். ஊமையை பேச வைப்பது, குருடரை பார்க்கவைப்பது இவர்கள் அள்ளிவிட்ட கட்டுக்கதைகள் ஏராளம் ஏராளம். இதையும் நம்பி ஆட்டு மந்தைகளைப் போல மக்கள் மதம் மாறியதுதான் கொடுமையிலும் கொடுமை. அதேசமயம், மதம் மாறியவர்களுக்கு ஆரம்பத்தில் நல்லது செய்வதுபோல நடித்து விட்டு, பின்னர் அவர்களிடமிருந்தே பணம் வசூலித்து தாங்கள் எப்படி கோடீஸ்வரர்கள் ஆனார்கள் என்பதையும் தெளிவாக அம்பலப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். மேலும், இதுபோன்ற போலி பாதிரியார்களுக்கு அரசும், அரசு அதிகாரிகளும் எவ்வாறெல்லாம் துணை நிற்கிறார்கள் என்பதையும் விவரிக்கத் தவறவில்லை.
இதுதான் கதை… தமிழகத்தின் கடைக்கோடியில் வறுமையில் இருக்கும் ஹீரோ விஜி பிரசாத், தனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்புக் கிடைக்காமல் தடுமாறுகிறான். சிறுவயதிலேயே அவனது தாய் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொள்கிறாள். இதனால் மன அழுத்தத்துக்கு ஆளான தம்பியும் பருவ வயதில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்கிறான். இதனால், ஹீரோவும் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகிறான். எனவே, பழைய நினைவுகளை மறக்க மும்பைக்குச் செல்கிறான். இங்குதான் மதம் மாற்றும் மாஃபியா கும்பலிடம் சிக்குகிறான். ஒருவர் சற்குணம், இன்னொருவர் மோகன் சி மோசஸ். இவர்கள் இருவரும் ஹீரோவின் ப்ளாஷ் பேக்கை பற்றி தெரிந்து கொண்டு, அவனை இன்டர்வியூவுக்கு அழைக்கிறார்கள். ஹீரோவும் போகிறான். அங்குதான் அவனுக்கு மக்களை மதம் மாற்றி பணம் சம்பாரிக்கும் பிளான் சொல்லப்படுகிறது. பயந்துபோன ஹீரோ, இதனால் பிரச்னை வராதா? என்று அப்பாவியாகக் கேட்க, நமக்கு பாதுகாப்புத் தருவதற்கென்று அரசாங்கத்தில் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள் என்று சற்குணமும், மோகன் சி மோசஸும் தில்லாக சொல்லும்போது, திராவிட இயக்கங்களை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
திட்டப்படி, விஜி பிரசாத்தை கேரளாவின் கொச்சிக்கு அழைத்துச் சென்று பாதிரியார் ட்ரெயினிங் கொடுக்கப்பட்டுகிறது. இந்த ட்ரெயினிங்கை கொடுப்பவர் பெயர் தினகரன். (யாரென்று புரிந்திருக்குமே?) ட்ரெயினிங் முடிந்ததும் ஜீவ பிரசாத் என்கிற ஹிந்து ஏழை, ஃபாஸ்டர் ஜோஸ்வா கால்டன் என பெயர் மாற்றம் பெறுகிறான். இதன் பிறகு, அவனை மதம் மாற்றும் மாஃபியா கும்பல் எப்படி எல்லாம் ஆட்டிப் படைக்கிறது, மக்களை எப்படி எல்லாம் மூளைச்சலவை செய்து முட்டாளாக்கி மதம் மாற்றுகிறார்கள், பிறகு எப்படி எப்படியெல்லாம் கோடி கோடியாக பணம் சம்பாதிக்கிறார்ள் என்பதுதான் மீதி கதை. இதில் கொடுமை என்னவென்றால், உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை, இயேசு கிறிஸ்து காப்பாற்றுவார் என்று சொல்லிச் சொல்லி, கடைசிவரை அந்த சிறுமியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல விடாமல் கொன்றே விடுகிறார்கள் என்பதுதான் வேதனை. இப்படத்தின் ஹைலைட் என்னவென்றால், க்ளைமேக்ஸ்தான். அது சஸ்பென்ஸ்.