சென்னையில் கடந்த 4 ஆம் தேதி நிக்ஜாம் புயல் சென்னை மாநகரத்தையே உலுக்கிவிட்டது. பல வீடுகளில் வெள்ள நீர் சென்று மக்கள் செல்லமுடியாத துயரத்திற்கு ஆளாகினர். ஆனாலும் இன்னும் ஒருசில பகுதிகளில் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பாத சூழ்நிலையில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னையில் அதிர்ச்சிகரமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. இந்தநிலையில் வடசென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மசூத் என்பவரின் மனைவி செளமியாவிற்கு கடந்த 5-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், மிக்ஜாம் வெள்ளத்தின் நடுவே தட்டுத்தடுமாறி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக பெண் குழந்தை பிறந்து இறந்தது. இந்த கொடுமைக்கு நடுவே, குழந்தையின் உடலை அடக்கம் செய்ய 2500 ரூபாய் குழந்தையின் பெற்றோரிடம் கேட்டிருக்கிறார்கள். நான்கு நாட்களுக்குப் பிறகு இறந்த குழந்தையின் உடலை சரியான முறையில் மூடப்படாமல் மருத்துவ அட்டைப்பெட்டியில் வைத்து தந்தையிடம் கொடுத்திருக்கிறார்கள். கண்முன்னே இறந்து கிடக்கும் குழந்தையை முறையாக மூடி கொடுங்கள் என பெற்றோர்களா சொல்ல முடியும்? அது, அரசு மருத்துவமனையின் கடமை அல்லவா?” எந்த தந்தையும் தன் வாழ்வில் சந்திக்கவே கூடாத கொடுமை இது. அரசு மருத்துவமனைகள் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை இந்த திமுக அரசு காப்பாற்ற தவறி விட்டது. கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக ‘தமிழக சுகாதாரத்துறை ஐ.சி.யூ-வில் இருக்கிறது’ என தொடர்ந்து ஆதாரங்களோடு குற்றஞ்சாட்டி வருகிறோம். இதோ, மற்றுமோர் உதாரணம். இவ்வாறு அதிமுக நிர்வாகியான விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது :-தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மாரத்தான்களை நடத்துவதிலும், முதலமைச்சரின் தவறுகளைப் பாதுகாப்பதிலும் மும்முரமாக இருப்பதால், நாட்டில் ஒரு காலத்தில் தேடப்பட்டு வந்த மருத்துவக் கட்டமைப்பு இன்று ஊழல் திமுக ஆட்சியின் கீழ் பாறையை எட்டியுள்ளது, விரைவில் திரும்ப முடியாத நிலையை அடையும். அவரது மனைவியை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ்கள் இல்லை, பின்னர், அவரது குழந்தையின் சடலம் அட்டைப்பெட்டியில் சென்னை அரசு மருத்துவமனையால் ஒப்படைக்கப்பட்டது.
அரசு மருத்துவமனைகளை நம்பி உள்ள மக்கள் படும் துயரங்களுக்கு இழப்பீடு அல்லது பெயர் சஸ்பென்ட் அறிவித்து இதை ஒதுக்கித் தள்ளுவதும், மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் காலத்தின் தேவை என்பதை மாநில அரசு உணர வேண்டும்.