விக்கிரவாண்டியில் போட்டி இல்லை : ஜகா வாங்கிய எடப்பாடி !

விக்கிரவாண்டியில் போட்டி இல்லை : ஜகா வாங்கிய எடப்பாடி !

Share it if you like it

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயகப் படுகொலை நடந்தது. இடைத்தேர்தலில் வாக்காளர்களை பட்டியில் அடைப்பது போல் செய்து திமுகவினர் முறைகேடு புரிந்தனர். ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் திமுக அதையே செய்யும்.

இடைத்தேர்தல் சுதந்திரமாக தேர்தல் நடக்காது என்பதால் தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது. தேர்தல் ஆணையம், அதிகாரிகள், காவல்துறையினர் திமுகவுக்கு துணையாக இருக்கிறார்கள். அமைச்சர்கள் பூத் வாரியாக பிரித்து பண மழை பொழிந்து ஜனநாயக படுகொலை நடைபெறும். திமுக ஆட்சியில் சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க முடியாத நிலை உள்ளதால் தேர்தல் புறக்கணிப்பு.

விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தலில் 6,000 ஓட்டுக்கள் தான் குறைவு. சட்டமன்ற தேர்தல் வேறு, நாடாளுமன்ற தேர்தல் வேறு. மக்கள் பிரித்து பார்த்தே வாக்களிப்பார்கள். தமிழ்நாட்டு மக்களை பொறுத்தவரை மத்தியில் யார் ஆட்சிக்கு வரவேண்டும், மாநிலத்தில் யார் வர வேண்டும் என்று பிரித்து பார்த்து, சிந்தித்து பார்த்தே வாக்களிக்கிறார்கள். அரசியல் கட்சிகளை பொறுத்தவரை எல்லா தேர்தலிலும் எந்த கட்சியும் வெற்றி பெற்றதாக சரித்திரம் கிடையாது. எல்லா கட்சியுமே தொடர்ந்து தோல்வி பெற்றதும் கிடையாது.

2026 சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது கனவு, அவரின் கனவு பலிக்காது. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *