பண மதிப்பிழப்பால் தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு இல்லை – தமிழக நிதியமைச்சர்..!

பண மதிப்பிழப்பால் தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு இல்லை – தமிழக நிதியமைச்சர்..!

Share it if you like it

கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் விதமாக ரூ.500, 1000 நோட்டுகளை செல்லாது என்று கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியன்று மோடி தலைமையிலான அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. அதே சமயம், புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளை மத்திய அரசு நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழிக்கப்படுவதோடு, மட்டுமில்லாமல் கள்ளநோட்டு புழக்கத்தை தடுக்கவும், பயங்கரவாதிகளுக்கு பணம் செல்லும் வழியை அடைக்கவும், பாரத தேசத்தின் பொருளாதாரத்தை மேலும் உயர்த்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பாரதப் பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.

பண மதிப்பிழப்பால் நாட்டிற்கு மிகப் பெரிய ஆபத்து, தமிழகம் மிகப் பெரிய இழப்பை சந்திக்க போகிறது என்று தி.மு.க உட்பட அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்கள் அந்நாட்களில் ஒப்பாரி வைத்ததை தமிழக மக்கள் யாரும் மறந்திருக்க முடியாது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தமிழகத்தில் குறைவான பாதிப்பே ஏற்பட்டுள்ளது என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று வெள்ளை அறிக்கை வெளியிடும் பொழுது கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it