மதமாற்ற உரிமை இல்லை : ஜாமீன் மறுப்பு : கோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு !

மதமாற்ற உரிமை இல்லை : ஜாமீன் மறுப்பு : கோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு !

Share it if you like it

மத சுதந்திரத்திற்கான உரிமைகளில் மற்றவர்களை மதம் மாற்றும் உரிமை இல்லை என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மதமாற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஜாமீன் மறுப்பு தெரிவிக்கும் போது நீதிமன்றம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

ஆந்திராவை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் ராவ் நாயக் என்பவர் ஏழை மக்களை மூளைச்சலவை செய்து மதமாற்றியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜாமீன் கேட்டு ஸ்ரீனிவாஸ் ராவும் வழக்கு பதிவு செய்திருந்தார். இதனை தொடர்ந்து செவ்வாய் கிழமை இந்த வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்தநிலையில் ஸ்ரீனிவாஸ் ராவ் நாயக்கின் ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால், இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு தனிநபருக்கும் அவரவர் மதத்தைப் பின்பற்றுவதற்கும், மற்றும் பிரச்சாரம் செய்வதற்கும் அடிப்படை உரிமையை வழங்குகிறது. ஆனால் மத மாற்றத்தை அனுமதிக்காது என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் ராவ் நாயக், சில இந்துக்களை ஆசை வார்த்தைகள் கூறி கிறிஸ்தவர்களாக மத மாற்றியதற்காக, 2021 மதமாற்ற தடைச் சட்டம் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டார். சில கிராமவாசிகள் ஹிந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறி சர்ச்சுக்கு சென்று பிரார்த்தனை செய்யத் தொடங்கினர், ​​இதனை தொடர்ந்து பிரிஜ்லால் என்பவர் காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தவறான சித்தரிப்பு, மோசடி, கட்டாய மதமாற்றுதல், வற்புறுத்தல் மற்றும் கவர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு மாறுவதை 2021 சட்டம் தெளிவாக தடை செய்கிறது என்று குறிப்பிட்டது.

இதைக் கருத்தில் கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுகளை கணக்கில் எடுத்துக் கொண்ட நீதிமன்றம், கிராம மக்களை கிறிஸ்துவ மதத்திற்கு மாறுவதற்கு வற்புறுத்தப்பட்டதால் விண்ணப்பதாரருக்கு ஜாமீன் வழங்க மறுப்பதற்கு இதுவே போதுமானது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *