Share it if you like it
2001- 2006 ஆம் ஆண்டு ஆண்டில் ஓபிஎஸ் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.72 கோடி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கிலிருந்து 2012 -ஆம் ஆண்டு அவர் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் ஓபிஎஸ்-க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். திமுக அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கே. கே. எஸ். எஸ். ஆர். ஆகியோர்
சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் விசாரணை, சரியாக நடத்தப்படவில்லை எனக் கூறி அந்த வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it