தேனாம்பேட்டை மருத்துவ பணிகள் இயக்குநர் வளாகத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில் அரசு மருத்துவமனையில் உள்ள காலியிடங்கள் முழுவதுமாக நிரப்பப்படும் மற்றும் ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என தேர்தல் வாக்குறுதி எண் 356 ல் கொடுத்து வெற்றி பெற்று 2 வருடங்கள் ஆகியும் இன்னும் அந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டுள்ளது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு என்று கூறப்படுகிறது.
மேலும் எங்களுக்கு ஒரு விடுமுறைநாளுக்கு கூட விடுப்பு வழங்குவதில்லை. மகப்பேறு நாட்களுக்கு கூட விடுப்பு வழங்குவதில்லை. இவ்வாறு கடினமாக மக்களுக்காக உழைக்கும் எங்களை பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல் துறையினரே எங்களை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்வது நியாயமா ? என்று போராட்டத்தில் கலந்துக்கொண்ட செவிலியர்கள் தங்கள் ஆதகங்களை கூறியுள்ளனர். காவல் துறையினர் கைது செய்யும்போது செவிலியர்கள் சிலர் மயக்கம் போட்டு விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
நோயாளிகளின் கடவுள்தான் செவிலியர்கள். ஏனெனில் 24 மணி நேரமும் அவர்கள்தான் நோயாளிகளை பார்த்து கொள்கின்றனர். அப்படிப்பட்ட செவிலியர்களின் பிரச்சனைகளை தீர்க்குமா இந்த திமுக அரசு என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.