பேருந்துகள் எந்த ஊர்களுக்கு செல்கிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள பேருந்துகளில் மின்னணு பெயர் பலகை பொருத்தப்படுகிறது. அதில் வரும் எழுத்துக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும். தமிழகத்தில் உள்ள பல பேருந்துகளில் மின்னணு பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பேருந்து ஒன்றில் மின்னணு பெயர் பலகையில் தமிழிலும் இல்லாமல் ஆங்கிலத்திலும் இல்லாமல் சீன மொழியில் காண்பித்தது. இதனை கண்ட மக்கள் இந்த பேருந்து எங்கு செல்கிறது என்று புரியாமல் திகைத்தனர். நாம் தமிழ்நாட்டில் இருக்கிறோமா இல்லை சீனாவில் இருக்கிறோமா என பயணிகள் விழிபிதுங்கி நின்றனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு என்னதான் சீனாவின் (கம்யூனிஸ்ட்) மீது பாசம் இருந்தாலும் அந்த பாசத்தை அரசு பேருந்துகளிலுமா காட்ட வேண்டும் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் ஸ்டாலினை விமர்சித்து வருகின்றனர்.
இதுபோல் தமிழ்நாட்டில் நிகழ்வது இது முதல்முறை அல்ல. கடந்த ஜனவரி மாதம் மதுரையில் உள்ள மாட்டு தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லக்கூடிய அரசு பேருந்து ஒன்றில் மின்னனு பெயர்பலகையில் சீன மொழியில் இருந்த நிகழ்வானது பெரும் சர்ச்சையானது.
இதுமட்டுமல்லாமல் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் விண்வெளி ஏஜென்சியான இஸ்ரோவுக்கான இரண்டாவது ஏவுதளத்தை தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் உருவாக்குவதைப் பாராட்டி திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தித்தாள் விளம்பரம், ஒன்றை கொடுத்தார். அந்த சுவரொட்டியில் உள்ள ராக்கெட்டில் நம் இந்திய கொடிக்கு பதிலாக சீனக் கொடியின் படம் காணப்பட்டதையடுத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியும் இதனை விமர்சித்து பேசியிருந்தார்.
திமுக அரசுக்கு சீனாவின் மீது அளப்பரிய காதல் உள்ளது என்பதை மேற்கண்ட நிகழ்வின் மூலம் அறிந்து கொள்ள முடியும். ஆக மொத்தம் நமது நாட்டை உயர்த்துவது பற்றி சிறு துளியும் யோசிப்பதில்லை. அண்டை நாடான சீனாதான் திமுக அரசுக்கு பிடித்திருக்கிறது என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.