சுதேசி, விதேசி என்ற திடீர் எழுச்சியினால் சீன பொருட்களை புறக்கணிப்போம் என்ற இணைய கதறல்கள் COVID-19 ஐ.. விட அதி வேகமாக வைரலாகி வருகிறது. மேம்போக்காக பார்த்தால் தேசத்தின் மீதான பிணைப்பு ஏதோ ஒரு வகையில் அவ்வப்பொழுது பொதுமக்களிடம் இருந்து வெளி வருவது நல்ல அறிகுறி தான்.
இந்திய சந்தையில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் சீனாவை.”சுயசார்பு பாரதம்” உற்பத்தித் துறையில் நம் பங்களிப்பை வேகமாக செயல்படுத்துவதன் மூலம் பாரத்தின் வெற்றி உறுதியாகும்.
சமீப காலமாக இந்திய இளைஞர்களை குறிப்பாக பெண்களை இன்னும் ஒருபடி மேலே போய் பள்ளி மாணவர்களை லட்சக்கணக்கில் தன் பிடிக்குள் சிக்க வைத்திருக்கிறது டிராகன். எல்லோரது கவனமும் வேறு ஒரு பக்கம் இருக்க ஆன்லைன் விளையாட்டு என்ற பொழுதுபோக்கு இணையதளம் என்ற பார்வையை சமூகத்திற்கு ஏற்படுத்திவிட்டு இளைஞர்களை, மாணவர்களை, ஆன்லைன் விளையாட்டு என்ற போதைக்கு கிட்டத்தட்ட அடிமையாக்கி விட்டது.
குறிப்பாக covid-19 Lock Down .. நேரத்தில் நம் பலவீனத்தை பயன்படுத்தி மாபெரும்” ONLINE RUMMY” எனப்படும் சூதாட்டத்தை செவ்வனே நடத்தி வருகிறது. வீட்டின் கழிவறை வரை ஊடுருவி விட்ட இணையதளம் வாயிலாக நடுத்தர குடும்பத்தினரின் உழைப்பை கோடிக்கணக்கில் சுரண்டிக் கொண்டிருக்கும் ஆன்லைன் சூதாட்டத்தில் சீனாவின் பங்களிப்பு 80% என்பது யாருக்காவது தெரியுமா?.
ஆச்சரியம் அளிக்கும் வகையில் தினமும் பல கோடிகளை நடுத்தர குடும்பத்தில் இருந்து கபளீகரம் செய்து வருகிறது. புற்றீசல் போல கிளம்பி உள்ள ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு ஏதேனும் சட்ட ரீதியிலான கட்டுப்பாடுகள் உள்ளனவா என்று, அது சார்ந்த துறைகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வினவிய பொழுது தான்?? இந்த நிறுவனங்கள் ஆதியும் இல்லாமல்!! அந்தமும் இல்லாமல்!!! இருப்பது தெரிய வந்துள்ளது.
ஆன்லைனில் யாருடன் விளையாடுகிறோம் என்று தெரியாமலேயே( 99% DATA ANALYSIS என்ற தொழில்நுட்பத்துடன் கூடிய ROBOT பயன்படுத்தப்படுகிறது என்பதே முற்றிலும் உண்மை) கோடிகளை இழந்து கொண்டிருக்கும் என் சகோதர, சகோதரிகளை காப்பாற்ற வேண்டும் என்பதே எனது நோக்கம்.
ரா. இராமலிங்கம்.
வழக்கறிஞர்.
சென்னை.