சென்னை மெரினாவில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய் செலவில் கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தெரிவித்து இருந்தார்.
எதிர்க்கட்சியாக இருந்த பொழுது தி.மு.க தனது பங்கிற்கு, கொரோனா நிவாரண நிதியை குறைவாக வழங்கி விட்டு. பீகாரில் இருந்து வந்தவருக்கு 380 கோடி ரூபாய் பணம் வழங்கியது நியாயமா? என்று அந்நாட்களில் நெட்டிசன்கள் திமுக-வை வறுத்தெடுத்தனர்.
தனது கூந்தலுக்கும், டியூசன் வாத்தியருக்கும் தனது சொந்த பணத்தை செலவு செய்த ஸ்டாலின் தனது தந்தையும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவிடத்திற்கு ஏன்? தனது சொந்த பணத்தை செலவு செய்து மக்களின் மீது இருக்கும் கடன் சுமையை குறைக்க கூடாது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆற்றிய அரும்பணிகளை போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில், அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடியில் அமைய உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தின் மாதிரி வடிவமைப்பு pic.twitter.com/1kYcOrzjEq
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 24, 2021
உயிரற்ற பட்டேல் சிலைக்கு 3000 கோடியாம், உயிர்வாழ துடிக்கும் #கஜா புயல் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட தமிழர்களுக்கு 350 கோடியாம்! #GajaCycloneRelief
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 2, 2018