உக்ரைனில் இருந்து எவ்வளவு இந்திய மாணவர்களை மீட்டுள்ளோம் என்று. விமான போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிரவித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா இடையே போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளதை தொடர்ந்து. அங்கு, சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் பயனாக பலர் நாடு திரும்பும் சூழல் உருவாகியுள்ளது. அரசு விமானங்கள், தனியார் விமானங்கள் மற்றும் போர் விமானங்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், நான்கு மத்திய அமைச்சர்கள், நேரடியாக களத்திற்கே சென்று உள்ளனர். அந்த வகையில், விமான போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, மீட்கப்பட்டுள்ள இந்திய மாணவர்கள் குறித்த விவரங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ”ஆபரேஷன் கங்கா” விவரம்: 76 விமானங்கள் மூலம், 15,920 மாணவர்களை வெற்றிகரமாக மீட்டுள்ளோம். ருமேனியா – 6680 (31 விமானங்கள்) போலந்து – 2822 (13 விமானங்கள்) ஹங்கேரி – 5300 (26 விமானங்கள்) ஸ்லோவாக்கியா – 1118 (6 விமானங்கள்)