நமது பாரதமே தேசிய ஒற்றுமைக்கு  முதன்மையானது !

நமது பாரதமே தேசிய ஒற்றுமைக்கு முதன்மையானது !

Share it if you like it

டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த நிர்வாகி ரங்கா ஹரி எழுதிய ‘பிரித்வி சூக்தா’ என்கிற நூல் வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் ஜி பகவத் கலந்துக்கொண்டார். அதில் பாரதத்தில் பல்வேறு வேற்றுமைகள் உண்டு. நமது நாடு 5,000 ஆண்டுகள் பழமையான கலாச்சாரம் கொண்டது, மதச்சார்பற்றது. நாட்டில் எவ்வளவோ பன்முகத்தன்மை உள்ளது. நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் சண்டை போடக் கூடாது. நாம் அனைவரும் ஒன்று என்று நினைக்க வேண்டும். நமது தேசிய ஒற்றுமைக்கு நம்முடைய தாய்நாடு முதன்மையானது. ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம். கடைசி மனிதனும் அறிவைப் பெற வேண்டும் என்பதற்காக நமது சன்னியாசிகள் இந்த பாரதத்தை உருவாக்கினர். உலகத்தின் நன்மைக்காகவே பாரதம் படைக்கப்பட்டது. அவர்கள் சன்னியாசிகள் மட்டுமல்ல. இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் பாடுபட்டவர்கள். அவர்கள் இன்னும் உலகத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இவ்வாறு மோகன் ஜி பகவத் பேசியுள்ளார்.


Share it if you like it