5 கோடிக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்குகள் தொடக்கம் !

5 கோடிக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்குகள் தொடக்கம் !

Share it if you like it

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைக்கப்பட்ட மருத்துவமனைகளில் குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற்றுக்கொள்ளும் வகையில் ஆயுஷ்மான் காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஆயுஷ்மான் பவ என்ற பிரச்சாரத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தற்போது நடைபெறும் ஆயுஷ்மான் பவ பிரச்சாரத்தில் 5 கோடிக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இத்திட்டத்தில் இணைக்கப்பட்ட மருத்துவமனைகளில் குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறும் வகையில் 4.4 கோடிக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த பிரச்சாரத்தில் 13.8 லட்சம் சுகாதார மேளாக்கள் கடந்த டிசம்பர் 28-ம் தேதி வரை நடத்தப்பட்டன. இதில் 9,21,783 சுகாதார நல மேளாக்கள், யோகா, மற்றும் தியான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை 11 கோடியை கடந்து விட்டது. இவர்களில் 6.4 கோடி பேருக்கு இலவச மருந்துகளும், 5.1கோடி பேர் இலவச பரிசோதனைகளும் செய்து கொண்டனர். 74 லட்சம் பேர் ஆயுஷ் சிகிச்சை பெற்றனர். 11 கோடி பேருக்கு வாழ்க்கை முறைக்கான ஆலோச னைகள் வழங்கப்பட்டன. இந்த மேளாவில் 45,43,705 கர்ப்பிணி பெண்கள் பதிவு செய்துகொண்டனர். 29 லட்சம் தாய்மார்களும், 48 லட்சம் குழந்தைகளும் பரிசோதனை செய்து கொண்டு தடுப்பு மருந்து பெற்றுக் கொண்டனர்.

18.9 கோடி பேருக்கு டிபி, ரத்த அழுத்தம், நீரிழிவு, வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய்,கண்புரை பரிசோதனைகள் செய்யப்பட்டன. சமுதாய சுகாதாரமைய மேளாக்களில் கடந்த 28-ம் தேதி வரை, 1.5 கோடி பேர்பதிவு செய்தனர். 1.1 கோடிக்கும் மேற்பட்டோர் பொது மருத்துவ ஆலோசனைகள் பெற்றனர். 49, 67, 675 பேர் சிறப்பு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றனர். 38,309 பேர் பெரியளவிலான அறுவை சிகிச்சைகளும், 1,30,760 பேர் சிறியளவிலான அறுவை சிகிச்சைகளும் செய்து கொண்டனர். இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Share it if you like it