கலை, சமூகப் பணி தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோரை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. நடப்பு ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகளுக்கான அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. அதன்படி, மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உட்பட பலருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு இந்திய அரசு பத்ம விருதுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் முதலிய பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 132 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் தமிழகத்தை சேர்ந்த 8 பேர் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்த தமிழகத்தை சேர்ந்தவர்கள் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகவும், தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் விஜயகாந்த் செயல்பட்டுள்ளார். தேமுதிக-வின் நிறுவனத் தலைவர். கடந்த டிசம்பரில் அவர் காலமானார். இந்த சூழலில் அவரது மறைவுக்குப் பிறகு அவருக்கு பத்ம பூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது.