உனக்கு 15… எனக்கு 54… ஹிந்து சிறுமி கடத்தல், பலாத்காரம்… மதமாற்றம்… முதியவர் திருமணம்!

உனக்கு 15… எனக்கு 54… ஹிந்து சிறுமி கடத்தல், பலாத்காரம்… மதமாற்றம்… முதியவர் திருமணம்!

Share it if you like it

பாகிஸ்தானில் 15 வயது ஹிந்து சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்து, மதம் மாற்றி 54 வயது முதியவர் திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணம் ஹைதராபாத் மாவட்டம் ஃபதே சவுக் பகுதியைச் சேர்ந்த சிறுமி சந்தா ஷாமன் மாக்சி. பிராமண குடும்பத்தைச் சேர்ந்த இச்சிறுமிக்கு 15 வயதாகிறது. இவரது தந்தைக்கு கண் பார்வை பறிபோய் விட்டது. ஆகவே, தாய் மற்றும் 2 சகோதரிகளுடன் குடும்பத்தை நடத்தி வந்தார் இச்சிறுமி. இந்த சூழலில், கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி இச்சிறுமியை 4 பேர் கொண்ட இஸ்லாமிய கும்பல் கடத்திச் சென்றது. பின்னர், அச்சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த அக்கும்பல், இஸ்லாமிய மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்திருக்கிறது. இதன் பிறகு, அக்கும்பலில் ஒருவரான 54 வயதுடைய முஸ்லீம் முதியவருக்கு அச்சிறுமியை திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.

இதையறிந்த, அச்சிறுமியின் பெற்றோர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, போலீஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர். ஆனாலும், எந்த பலனும் இல்லை. அதேபோல, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த எந்த ஊடகமும் இதுகுறித்து செய்தி வெளியிடவில்லை. இதனால், அச்சிறுமியின் குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்து நின்றனர். இந்த நிலையில்தான், பாகிஸ்தான் தாராவர் இதேஹாத் நிறுவனர் மற்றும் தலைவரான உமர்கோட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஃபக்கீர் ஷிவா கச்சி, கடந்த அக்டோபர் 16-ம் தேதி ஹைதராபாத்தில் போராட்டம் நடத்தினார்.

இதையடுத்து, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், ஆகஸ்ட் 30-ம் தேதியன்று சந்தா ஷாமன் மாக்சியை கட்டாயமாக மதமாற்றம் செய்து திருமணம் செய்து கொண்ட விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. ஆனால், திருமணச் சான்றிதழில் அச்சிறுமிக்கு 19 வயது என்று போலியாக குறிப்பிட்டிருக்கிறார்கள். பின்னர், கடந்த 19-ம் தேதி அச்சிறுமி கராச்சியில் இருந்து மீட்கப்பட்டு, அனாதை இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக வழக்கு பாகிஸ்தானிலுள்ள லோக்கல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அச்சிறுமியை பெற்றோரிடம் அனுமதிக்க மறுத்த நீதிமன்றம், கடத்தப்பட்டவரிடமே ஒப்படைக்க உத்தரவிட்டது.

இதனால் அச்சிறுமியின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். இத்தீர்ப்பைக் கேட்ட அச்சிறுமி, தனது பெற்றோரையும், உறவினர்களையும் கட்டிப் பிடித்து அழுகிறார். இது தொடர்பான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து விட்டு, பாகிஸ்தானில் ஹிந்துக்களுக்கு நீதி மறுக்கப்படுவது குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். பாகிஸ்தான் மக்கள்தொகையில் 97 சதவீதம் பேர் முஸ்லீம்கள். ஹிந்துக்கள் சுமார் 2 சதவீதம் மட்டுமே. இவர்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர், ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்திய எல்லையில் உள்ள சிந்து மாகாணத்தில் வசிக்கின்றனர். அப்படி இருந்தும் முஸ்லீம்களால் இதுபோன்ற கட்டாய மதமாற்றம், பலாத்காரம் போன்ற சம்பவங்களுக்கு உள்ளாகின்றனர். ஆனால், இதுகுறித்து பாகிஸ்தான் அரசாங்கங்கமும், அரசியல்வாதிகளும், ஊடகங்களும் வாய் திறப்பதே இல்லை.


Share it if you like it