பழனி கோயில் கும்பாபிஷேகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அரங்கேற்றிய அட்டூழியங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன.
முருகனின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடான பழனி தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மத்தியில் பிரபலமானது. மேலும், உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இவ்வளவு பெருமைவாய்ந்த பழனி கோயில் கும்பாபிஷேகம் சமீபத்தில் நடந்தது. இந்த கும்பாபிஷேகத்தின்போது ஆகம விதிகள் மீறப்பட்டதாகவும், தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் கருவறைக்குள் நுழைந்து களங்கம் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் றெக்கை கட்டின.
இந்த நிலையில், பழனி கோயில் கும்பாபிஷேம் நடந்தபோது என்னென்ன அக்கிரமங்கள், அராஜகங்கள், அட்டூழியங்கள் நடந்தன என்பது பற்றி சமூக ஆர்வலரும், ஆலயக் குழு உறுப்பினருமான ரமேஷ் புட்டுப்புட்டு வைத்திருக்கிறார். பழனி கோயிலில் நடந்த அட்டூழியங்கள் என்னென்ன என்பதை விரிவாகத் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோவை பாருங்கள்…