எய்ம்ஸ் தாமதத்திற்கு தி.மு.க.வும் முக்கிய காரணம் என மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே வெளுத்து வாங்கி இருக்கும் காணொளி வைரலாகி வருகிறது.
பிரபல எழுத்தாளர், பத்திரிகையாளர், சொற்பொழிவாளர் என பன்முகதன்மை கொண்டவர் ரங்கராஜ் பாண்டே. இவர், தனது சாணக்கிய இணையதள ஊடகத்திற்கு அண்மையில் பேட்டியளித்தார். இந்த, நேர்காணலில் நெறியாளர் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு மிக தெளிவாகவும், ஆணித்தரமாகவும் பதில் அளித்து இருக்கிறார்.
நெறியாளர்; சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை மிக விரைவாக கட்டப்பட்டுள்ளது. ஆனால், மதுரையில் மட்டும் மிகவும் தாமதமாகி வருகிறது. இதற்கு, யார்? காரணம் என்ற கேள்வியை முன்வைக்கிறார்.
பாண்டே ; பா.ஜ.க. மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் மிக எளிமையாக இதற்கு பதில் சொல்லி இருக்கிறார். அ.தி.மு.க. அரசு எப்போ நிலம் கொடுத்தது. எப்போது, சுற்று சுவர் கட்டியது என்று கேட்டு இருந்தார். நான் கேட்கிறேன். தி.மு.க. ஆட்சி அமைந்து ஒன்றரை ஆண்டு காலத்திற்குள் ஒரு நாலு கட்டிடத்தை கட்டி இருக்க முடியாதா? நேரு ஸ்டேடியம் கின்னஸ் முறையில் கட்டப்பட்டது. அதுபோல, இந்த கட்டிடங்களை நீங்கள் கட்ட வேண்டியது தானே. செங்கல்லை தூக்கி கொண்டு ஊர் ஊராக உதயநிதி ஸ்டாலின் போனார். இந்த ஒன்றரை ஆண்டிற்குள் இந்த செங்கல் எங்கே? போனது.
தி.மு.க. ஆட்சியில் எத்தனை பிளாக் கட்டப்பட்டு இருக்கு. எய்ம்ஸ் நமக்கு, வேண்டும் என்று அரசியல் செய்தீர்கள், பிரச்சாரம் செய்தீர்கள். இப்போது, ஆட்சிக்கு வந்து விட்டீர்கள். ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இதுவரை, நீங்கள் செய்தது என்ன? என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து தி.மு.க.வை வெளுத்து வாங்கியிருக்கிறார் பாண்டே. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.