மதங்களிலே சிறந்த மதம் இந்து மதம். இதில் கூறப்படாத கருத்துகளே இல்லை ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெளிவாக விளக்கக்கூடிய ஒரே மதம் இந்து மதம்தான். ஒருவன் மனதிலும், எண்ணத்திலும், சிந்தனையிலும் நல்ல எண்ணங்கள், உயர்ந்த நோக்கம், தியாகம், தர்மம், பக்திநெறி இவை இருந்தால் உயர்ந்த நிலையான இறை நிலையை அடையலாம் என்பதை தெளிவாக கூறுவது இந்து தர்மம் ஆகும்.
அப்படிப்பட்ட உயர்ந்த இந்து தர்மத்தின் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் குழப்பவாதிகளே உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக தெரிவிப்பது என்னவென்றால் எந்த காலத்திலும் இந்து தர்மத்தில் குழப்பத்தை ஏற்படுத்த நீங்கள் தலைகீழாக நின்று முயற்சி செய்தாலும் இந்து தர்மத்தை அழிக்க முடியாது என்பது உண்மை. இந்த உலகமே அழிந்தாலும் கூட இந்து தர்மம் அழியாது அடுத்த பிரபஞ்சம் உருவாக உறுதுணையாக இருக்கும் என்பதை கனிவாக தெரிவித்துக் கொள்கிறோம். இன்றைய பதிவில் சங்கரநாராயணன் கோவிலைப்பற்றி ஆராய்ந்து தெளிவாக குறிப்பிட்டிருக்கிறோம் இதனை படித்து சங்கரநாராயண ஸ்வாமியின் அருளை பெறுங்கள்.
தல வரலாறு:
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் வட்டம், சங்கரன்கோவில் ஊரில் சங்கரநாராயண ஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சங்கரலிங்க சுவாமி, கோமதி அம்மன் மற்றும் நாராயணசுவாமி காட்சி தருகிறார்கள். இக்கோயில் கிபி 1022 ஆம் ஆண்டு “உக்கிரபாண்டியன்” என்னும் மன்னரால் கட்டப்பட்ட கோயிலாகும். இந்தக் கோயிலின் கோபுரம் சுமார் 128 அடி உயரம் கொண்டது.
சங்கன், பதுமன் என்று இரு நாக மன்னர்கள் இடையே சண்டை மூண்டது. சங்கன் சிவனே அதிக ஆற்றல் பெற்றவர் என்றும், பதுமன் பெருமாளே அதிக ஆற்றல் பெற்றவர் என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருவரும் கோமதி அம்மனிடம் முறையிட்டனர். சங்கன், பதுமன் மட்டுமின்றி இறைவனின் முழு வடிவத்தை உலகம் உணர வேண்டும் என கோமதி அம்மன் சிவனையும், பெருமாளையும் நோக்கி ஊசி முனையில் மேலிலிருந்து தவம் செய்தார்.
கோமதி அம்மன் வேண்டுகோளுக்கு இணங்க சிவனும், திருமாலும் சங்கரநாராயணர் சுவாமியாக இந்த உலகிற்கு காட்சி தந்தனர். கடவுள் இருவரும் சமம் என்றும் அன்பினாலும், தியாகத்தினாலும் மட்டுமே இவர்களை அடைய முடியும் என்பதை அந்த இரு நாக மன்னர்கள் உணர்ந்து இறைவனை வழிபட்டு கோமதி அம்மன் உடனே தங்கினர். முதலில் இந்த நாகர்களை வணங்கிய பிறகுதான் கோமதி அம்மனையும், சங்கரநாராயண சுவாமியையும் வணங்கும் முறை காலம் காலமாக நடைமுறையில் உள்ளது. இந்த நாகர்கள் இங்கு புற்று வடிவில் காட்சி தருகிறார்கள். இந்த ஆலயத்தில் புற்று மண்தான் திருநீர் ஆக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த ஆலயம் பாண்டிய வம்சத்தினரான “மல்லர் சமூகத்தை” சேர்ந்தவர்கள்தான் அர்ச்சகராக பூஜை செய்கிறார்கள். இந்தக் கோயில் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயிலாகும். இதுபோன்று தமிழகத்தில் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்கள் அர்ச்சகராக உள்ளார்கள்.என்பதை உங்கள் நினைவிற்கு கொண்டு வந்துள்ளோம்