இலவச தேங்காய் கேட்டு கடைக்கார பெண்ணிடம் தகராறு, பீடி கொடுக்க தாமதமான பெண்ணின் மீது தாக்குதல், பியூட்டி பார்லர் பெண் மீது தாக்குதல் என்று பெண்களுக்கு எதிரான கட்சியாக தி.மு.க உள்ளது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. பெண்களுக்கு உரிய மரியாதை வழங்காமல் இன்று வரை தி.மு.க நிர்வாகிகள் நடந்து கொண்டு வருவதை தினம் தினம் ஏதேனும் ஒரு செய்தி நாளிதழிலோ அல்லது செய்தி ஊடகங்களிலோ வருவதை தமிழக மக்கள் பார்த்து கொண்டு இருக்கின்றனர் என்பது நிதர்சனம்.
தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த பொழுது அக்கட்சியின் மூத்த பெண் உறுப்பினர் பாப்பம்மாள் பாட்டி, ஸ்டாலினை சந்தித்த பொழுது காதில் வைர தோடு இல்லாமல் சந்தித்தார். அதே பாட்டி பாரதப் பிரதமர் மோடியை சந்திக்கும் பொழுது காதில் வைர தோடு உடன் சென்று பிரதமருக்கு ஆசி வழங்கியதாக அந்நாட்களில் நெட்டிசன்கள் தி.மு.க-வின் வரலாறு குறித்தும் தி.மு.க-வின் சிறப்பு குறித்தும் கிண்டல் செய்து இருந்தனர்.
அதனை தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்த தி.மு.க தலைவர் ஸ்டாலினை அண்மையில் பாப்பம்மாள் பாட்டி சந்தித்து உள்ளார். மீண்டும் அதே போல காதில் வைரதோடு அணியால் தமிழக முதல்வரை சென்று சந்தித்து உள்ளதற்கு வழக்கமல் போல நெட்டிசன்கள் உஷாரான பாட்டியாக தான் இருக்கிறார் இந்த பாப்பம்மாள் தி.மு.கவின் வரலாறை நன்கு அறிந்தவர் ஆயிற்றே என்று நெட்டிசன்கள் மீண்டும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

