சித்திரை வெயிலின் மதியபொழுதில் உயரமான ஒல்லியான அந்த மனிதர் வியர்க்க விறுவிறுக்க சென்னை வீதியில் நடந்துசென்றுகொண்டிருக்கிறார். ‘படீரென்று’ ஒரு சத்தம் செறுப்பறுந்துபோய்விட்டது. வேறுவழியின்றி வெறும்காலுடன் நடந்து சென்றபோது , எதிரே வந்த நண்பர் கிண்டலாக – என்ன? செருப்பறுந்துவிட்டதா என கேட்க , ஒல்லியான மனிதர் உடனே கூறினார்
” உறுபறுந்து போனாலும் உள்ளம்
கலங்கான்; இச் செருப்பறுந்து
போனதற்கோ சிந்திப்பான்
நெருப்பை எதிர்பதற்கும் அஞ்சாத
எண்ணம் படைத்தாற் பின்
கொதிக்குமிந்தத் தார் குளிர் நீர் “
ஆம் ! நின்ற நிலையில் ஆசுகவியாக அருமையான பாடலைப் பதிலாகக் கூறிய ஒல்லியான உயரமான அம் மனிதர் “பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்”.
சோறுடைய கோடிநாட்டில் பட்டுக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த செங்கப்படுத்தான்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சல கவிராயருக்குப் பிறந்த நான்காவது மகவு கல்பாணசுந்தரம். 13.4.1930 ல் பிறந்த் கல்யாணசுந்தரத்தின் தாயார் பெயர் விசாலாட்சி அம்மையார்.
பட்டுக்கோட்டையாரின் பாடல்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டமே பெற்றுள்ளார்கள். ஆனால் கல்யாணசுந்தரம் அவர்களின் முறையான பள்ளிபடிப்பு திண்ணைப் பள்ளியில் ஆரம்ப கல்வியுடன் நிறைவுபெற்றுவிட்டது. மக்களின் துயரங்களை தன் பாடல்களில் பதிவு செய்ய அந்த “மக்கள் கவிஞருக்கு” பல்கலைப் படிப்பு தேவைப்படவில்லை.
1930 களில் பேசும் படங்களின் வருகைக்கு பின்னர் திரையிசைப் பாடல்கன் தமிழகத்தின் வீதிகளில் ஒலிக்கத் தொடங்கியது. தினமும் திரைபடங்களை பார்ப்பதும் படப் பாடல்களை பாடி மகிழ்வதும் கல்யாணசுந்தரத்தின் வழக்கமாயிற்று. இடதுசாரிகளின் தலைவர் ஜீவானந்தத்தின் தொடர்பால் பல மேடைகளில் தனது கவிதைகளை பாடினார் சுந்தரம். ” தேனாறு பாயுது ! செங்கதிர் சாயுது ! ஆனாலும் மக்கள் வயிறு காயுது” என்ற வரிகள் ஒரு மக்கள் கவிஞரை உருவாக்கின.
தனது திறனமக்கு உகந்த வாய்ப்பினைத் தேடி சென்ணைப் பட்டனம் போனார் கல்பானசுந்தரம், கெடுவாய்ப்பாக காந்தி கொல்லப்பட்ட காரணத்தால் மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பினார், தனது கலைத்தாகத்தை தணிக்க சேலம் “சக்தி நாடக சபாவில்” இணைந்தார் கவிஞராக அல்ல நடிகராக.
கல்யாணசுந்தரம் நடிக்க நல்ல வாய்ப்பை வழங்கிய நாடகம் “கவியின் கனவு”! அந்நாடகத்தில் ராஜகுரு பாத்திரமேற்று நடித்த எம்.என்.நம்பியார் திரையுலகில் கவளம் செலுந்தத்தொடங்கியதால் ராஜகுருவானார் கல்யாணசுந்தரம்.
சக்தி நாடக சபா புதுவைக்கு இடம்பெயர தனது மானசீக குருவான பாரதிதாசனை சந்திக்க சென்றார். அப்போது, திரைவாய்ப்புக்காக பாரதிதாசன் சென்னையிலிருந்தார். பாரதிதாசனின் மகன் மன்னர்மன்னன் அறிவுறுத்தலின் பேரில் பாரதிதாசனை சந்திக்க சென்னைக்கு விரைந்தார் கல்யாணசுந்தரம். புரட்சிக்கவிஞர் நடத்திவந்த குயில் இதழில் பணிபாற்ற தொடங்கினார். இயல்பாக பாடல் புனையும் ஆற்றல் படைத்த கல்யாணசுந்தரத்திற்கு மனதிற்கு உவப்பான பணியாக இருந்தது அது.
ஒருநாள் தன் உதவியாசிரியர்களை அழைத்த பாரதிதாசன் “ஆண்பிள்ளைகள் நீங்களும் எழுதுகிறீர்களே கவிதை..!”. இதோ பாருங்கள் ‘அகல்யா’ என்று பெண்ணொருத்தி பிரமாதமா பாட்டு எழுதியருக்கா பாருங்கள் என ஒரு கவிதையைப் படித்தார்.
கல்யாணசுந்தரம் மனதிக்குள் புன்னகைத்தார்! அதனை எழுதிய ‘அகல்யா’ அவரேதான்! ‘அ.கல்யாணசுந்தரம்’ என்ற பெயருக்கு நடுவேயான புள்ளியை புள்ளியை எடுத்துவிட்டதால் பிறந்தவர் “அகல்யா”!.
புள்ளியை எடுத்த பின் ஒரு பெரும்புள்ளி உருவானார். விரைவிலேயே “படித்தபெண்” என்ற படத்திற்கு பாடல் எழுதும் வாய்ப்பு அவருக்கும் கிட்டிற்று. 1956-ல் அப்படம் வெளியானது.
சேலம் மாடர்ன் தியேட்டர்ல் தயாரிப்பில் வெளியான “மகேஸ்வரி” திரைப்படத்தில் ஐந்து பாடல்களை எழுதினார் சுந்தரம்.
மகேஸ்வரியின் மூலம் கல்யாணசுந்தரத்தை தமிழ்த் திரையுலகம் திரும்பிப் பார்க்கத் தொடங்கியது. மாடர்ன் தியேட்டர்ஸின் மற்றொரு தயாரிப்பான பாசவலைக்கு பட்டுக்கோட்டை எழுதிய பாடல் ஒன்று பெற்ற வெற்றி. அடுத்த சில ஆண்டுகளை தமிழ்திரையிசையை பட்டுக்கோட்டையின் வலைக்குள் சிக்கவைத்தது.
“ குட்டி ஆடு தப்பி வந்தா
குள்ளநரிக்குச் சொந்தம் “
-என்ற சிரஞ்சீவி பாடல்!
சுந்தரம் எழுதிய மற்றொரு பாடல்,
” மச்சான் உன்னைப் பார்த்து
மயங்கிபோனேன் நேத்து “!
இதில் சுந்தரம் எழுதிய ” லொள் ! லொள்!!” என்ற நாய் குரைப்பதைப் போன்ற வரிகளை திரையில் இப்பாடலை நடித்த ராஜாமணி என்ற நடிகைக்கு “லொள் லொள் ராஜாமணி” என்ற பட்டப்பெயரை வாங்கித் தருமளவிற்குப் பிரபலமானது.
1956-ல் அண்ணாதுறையின் ரங்கோன் ராதா! பிற்கு மர்ம வீரன் ! இந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் எட்டு படங்களில் கல்யாணசுந்தரம் பாடல்கள் எழுதினார். புகழேணியின் உச்சியில் மளமளவென ஏறினார்.
ஆர்.எம், வீரப்பன் கல்யாணசுந்தரத்தினை தமிழ்த் திரையுலகின் மன்னனான எம்.ஜி.ஆரிடம் அழைத்துச் சென்றார். “ காடு வெளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம் ” என்ற பாடல் வரிகளை கைகளால் தாளம் போட்டு சுந்தரம் பாடிக் காண்பிக்க எம்.ஜி.ஆர்க்கு மிகவும் பிடித்த கவிஞராகிப்போனார். எம்.ஜி.ஆர் தான் தயாரித்த “ நாடோடி மன்னன்” படத்தில் சுந்தரத்தின் பாடல் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே சிறைக்காட்சியை உருவாக்கினார் . அக்கட்சிக்கு சுந்தரம் எழுதிய பாடல் தான் “தூங்காதே தம்பி தூங்காதே!”.
வெற்றிப்படிக்கட்டுகளில் விரைக்து ஏறிய சுந்தரத்திற்கு திருமணம் ஆகி, குழந்தையும் பிறந்தது, ‘குமாரவேல்’ எனப் பெயரிட்டு கொஞ்சினார்.
தங்கப்பதுமை, பாண்டித்தேவன், கல்பாணப்பரிசு, நல்லதிர்ப்பு, கலைவாணன் என அடுத்தடுத்த படங்களில் பட்டுக்கோட்டையின் பாடல்கள் வெளிவந்து தமிழக மக்களின் காதுகளை மற்றும் சிந்தனையை நிரப்பின.
தேனினும் இனிப் பாடல்களைத் தந்த பட்டுக்கோட்டையாரை திடீரென தேடிவந்தான் மரணதேவன். மூக்கில் ஏற்பட்ட சிறுப் பருவிற்கு அறுவை சிகிச்சை என மருத்துவனையில் அனுமதிகப்பட்டவர் 08-10-1959 ஆண்டு மாலை 3.45 க்கு மறைந்தார்.
1972 அக்டோபர் 16- ம் தேதி அதிமுக கட்சியை தொடங்கிப் எம்.ஜி.ஆரிடம் உங்கள் கொள்கைகள் என்ன என்று கேட்டதற்கு “நாடோடி மன்னன் பாடல்கள்” என்றார். ஆம் பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகள். தனது ஆட்சி அரியணையின் நான்காவது தூண் என்று மனதாரப் புகழ்ந்தார் எம்.ஜி.ஆர்.
“திருடாதே பாப்பா திருடாத”
“ சின்னப்பயலே சின்னப்பயலே சேதிகேளடா” .
போன்ற வரிகளை தான் நாவு உச்சரிக்க காரணமா கவிஞரின் நன்றியை எம்.ஜி.ஆர். மறக்கவில்லை.
திரைப்பாடல்கள் வெறும் பொழுதுபோக்குக்கான இசைக்கான வரிகளை எழுதும் தொழிலாக பட்டுக்கோட்டயார் பார்க்கவில்லை. எளிய மக்கள் சிந்திக்க தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு செல்லும் ஆயுதம் என நினைத்தார்; எழுதினார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அதிக ஆண்டுகள் வாழவில்லை ! நூற்று சொச்சம் பாடல்கள் மட்டுமே எழுதியுள்ளார். எண்ணிககையால் அல்ல; தரத்தால் மட்டுமே வரலாறு சாதனைகளை வரவுவைத்துக் கொள்ளும்!.
ஆம்! இரண்டே சங்கப்பாடல்களைத் தந்த கணியன் பூங்குன்றன் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்வதைப் போல சுந்தரமும் வாழ்வார்..
- திரு.பச்சையப்பன்.