திபெத்தில் ஒலித்த தமிழ் அருணாச்சல முதல்வர் பெமா கண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழி மற்றும் தமிழர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். அந்த வகையில், தமிழின் பெருமையை உலகம் முழுவதும் சென்று சேர்த்து வருகிறார். ரத்தம் சிந்தும் போர் முனையானாலும் சரி, சமாதானம் குறித்து பேசும் ஐ.நா. சபையானாலும் சரி அனைத்து இடத்திற்கும் தமிழ் மொழியை உச்சரித்த ஒரே பிரதமர் மோடி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இதனிடையே, பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், அருணாச்சல பிரதேச முதல்வருமாக இருப்பவர் பெமா கண்டு. இவரும், பாரதப் பிரதமர் மோடி போல தமிழ் மொழியின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.
இதனிடையே, சுதந்திரத்தின் சுந்தரப் பெருவிழா நிகழ்ச்சி நாடு முழுவதும் அண்மையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், அருணாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த குமாரி அஷாப்மாய் டெல்லாங் மற்றும் அவரது சகோதரி பெஹெல்டி அமா இருவரும் சுப்ரமணிய பாரதியின் பாடலை கர்நாடக இசையில் மிக அழகாக பாடி இருந்தனர். இக்காணொளியை, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மற்றும் பாரதப் பிரமதர் மோடிக்கு தனது ட்விட்டர் வாயிலாக டேக் செய்து தனது மகிழ்ச்சியை அருணாச்சல முதல்வர் பெமா கண்டு வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில், அருணாச்சல பிரதேச முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில், திபெத் எல்லையில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரருடன் அருணாசல பிரதேசத்தை சேர்ந்த மருத்துவர் லாம் டோர்ஜி சரளமாக தமிழில் பேசி உரையாடி இருக்கிறார். இதுதான், உண்மையான வேற்றுமையில் ஒற்றுமை என்று பெமா கண்டு பெருமிதமாக குறிப்பிட்டு இருக்கிறார்.