மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் மிக தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஆனால் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் திமுக வேட்பாளர்களை விரட்டி அடிக்கும் சம்பவம் தான் அரங்கேறுகின்றன.
மத்திய சென்னை எம்பி திமுக வேட்பாளரான தயாநிதி மாறன் வாக்கு சேகரிக்க பிரச்சார வாகனத்தில் தனது தொகுதிக்குட்பட்ட லாக் நகருக்கு சென்றுள்ளார். அப்போது பிரச்சார வாகனத்தை தடுத்து நிறுத்தி அந்த பகுதியில் உள்ள மக்கள் தயாநிதி மாறனை சூழ்ந்து சரமாரியாக கேள்வி எழுப்பினர். எங்கள் பகுதி மக்களுக்கு வீடு கட்டி தருவதாக வாக்குறுதி கொடுத்தீர்கள். அதை நிறைவேற்றினீர்களா ? அதற்காக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் ? தேர்தல் வரும்போது மட்டும்தான் ஓட்டு கேட்டு வரீங்க..இவ்வாறு சரமாரியாக கேள்வி எழுப்பிய மக்களுக்கு பதில் சொல்ல தெரியாமல் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறினார். இந்த சம்பவமானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக சென்னை மைலாப்பூரில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு சென்ற திமுக வேட்பாளரான தமிழச்சி தங்கபாண்டியனை மக்கள் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.