அருணாச்சல் பிரதேஷத்தில் பாஜக முதல்வர், பேமா காண்டு ஆட்சி செய்து வருகிறார். இங்கு சுபன்சிரி எனும் மாவட்டத்தை சேர்ந்த மலைக் கிராமமான யலாலி எனும் இடத்தில சுமார் 12,000 பேர் வசித்து வருகின்றனர். கோவிட் பரவலை தடுப்பதற்காக இந்த கிராமத்தினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை அரசு துவங்கியது ஆனால் தடுப்பூசி குறித்து வெளியான வதந்திகளால் மக்கள் அச்சப்பட்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வரவில்லை.
வதந்திகளை முறியடித்து எப்படியும் மக்களை தடுப்பூசி போட வைக்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு புது யுக்தியை கையில் எடுத்த அரசு, தடுப்பூசி செலுத்திக்கொண்டால் 20 கிலோ அரிசி இலவசம் என அறிவித்தது இதனால் அக்கிராமத்தில் உள்ள 84 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது இன்னும் 209 பேர் மட்டுமே மீதம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் இலவச அரிசி வழங்கும் செலவு மூலம் அரசுக்கு சுமை ஏற்படுத்தாமல் உள்ளூரில் உள்ள செல்வந்தர்கள் மூலம் அச்செலவையும் ஈடுசெய்து திறம்பட இவ்விவகாரத்தை கையாண்டுள்ளனர்.