வெள்ளத்தில் மக்கள் : டெல்லியில் முதல்வர் : டிரெண்டாகும் #MissingCM !

வெள்ளத்தில் மக்கள் : டெல்லியில் முதல்வர் : டிரெண்டாகும் #MissingCM !

Share it if you like it

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி, நேற்று இரவு வரை பலமணி நேரம் இடைவிடாமல் கனமழை பெய்தது. இன்றும் சில இடங்களில் மழை தொடர்கிறது. வெள்ளத்தின் பாதிப்புகளை மக்கள் சமூக வலைதளத்தில் பாதிப்புகளாக வெளியிட்டுள்ளனர். அதீத கனமழையால், குறிப்பாக நெல்லை மாநகரம் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நெல்லையில் அடையாளங்களில் ஒன்றான வண்ணாரப்பேட்டை பாலத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு தாமிபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு பாய்கிறது. இதனால் தென் மாவட்டங்களில் உள்ள மக்கள் பலர் மின்சாரம் இல்லாமலும், உணவு இல்லாமலும் தவித்து வருகின்றனர். மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களை மத்திய அரசின் ஹெலிகாப்டர் மூலமாக காப்பாற்றி வருகின்றனர்.

இப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் மக்களோடு மக்களாக களத்தில் இறங்கி வேலை செய்யாமல் விமானத்தில் ஏறி டெல்லிக்கு சென்று இந்தியா கூட்டணியில் பங்கேற்க டெல்லிக்கு சென்றுள்ளார் ஸ்டாலின்.
2024 மக்களவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்த 5 பேர் கொண்ட குழுவை அக்கட்சி அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதை எதிர்கொள்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் மேற்கொண்டுள்ளன. முதல் நடவடிக்கையாக எதிர்க்கட்சிகள் சார்பில் இண்டியா கூட்டணி அமைக்கப்பட்டது. இக்கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் இதுவரை 3 சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், புதுடெல்லியில் இன்று 4-வது முறையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் சமூக வலைத்தளங்களில் #MissingCM என்கிற ஹாஷ்டாக் டிரெண்டாகி வருகிறது.


Share it if you like it