நீலகிரி மக்களவைத் தொகுதியின் கடைக்கோடி பகுதியான அவிநாசி பேரூராட்சியின் 18 வார்டுகள், சுற்றியுள்ள 31 ஊராட்சிகளையும் கொண்டதுதான் அவிநாசி தொகுதி. அன்னூர் – அவிநாசி – சாமளாபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. தற்போது கூட்டுக் குடிநீர் திட்டங்கள் திருப்பூருக்கும் விரிவுபடுத்தப்பட்டதால், அவிநாசிக்கு கிடைக்கும் குடிநீரின் சுவை மாறியுள்ளதாகவும், தரமற்ற நிலையில் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் இப்பகுதிகளில் உரிய சுத்திகரிப்பு செய்யாமல், குடிநீர் விநியோகிக்கப்படுவதால், பயன்படுத்துவதற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. அசுத்தமான குடிநீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு, காய்ச்சல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்பு ஏற்படுகிறது. இப்பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி, அவிநாசி பேரூராட்சியின் 12 மற்றும் 14-வது வார்டுகளில் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் சார்பில் அறிவிப்புப் பதாகைகள் வைக்கப்பட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நீலகிரி தொகுதியில் திமுக அமைச்சரான ஆ ராசா போட்டியிட போகிறார். முன்னதாக நடந்த தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரான ஆ.ராசா அந்த தொகுதி மக்களுக்கு எந்த நலத்திட்டமும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இதுபோன்ற போராட்டம் மக்கள் நடத்தி வருவதால் திமுக அங்கு ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் திமுகவை வறுத்தெடுத்து வருகின்றனர்.